உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூர் கொலையில்  3 பேர் சரண் 

ஓசூர் கொலையில்  3 பேர் சரண் 

ராமநாதபுரம்: கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூர் அருகே திம்மராஜ் என்பவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 3 பேர் ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.ஓசூர்அருகே பேகேப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராஜ் 40. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், தீக் க்ஷிதா 10, என்றமகளும் உள்ளனர். இவர் கடையில் டீ குடித்த போது முகமுடி அணிந்து வந்த 3 பேர் கத்தியால் குத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில்போச்சம்பள்ளி முனிராஜ் மகன் கிரண் 22, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் 22, தேன்கனிக்கோட்டை கிருஷணமூர்த்தி மகன் மூர்த்தி 21 ஆகியோர் ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார். ------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை