உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணிகளில் 30% பாக்கி; முடிந்தால் நிரந்தர தீர்வு: சென்னை மக்களுக்கு ஸ்டாலின் உத்தரவாதம்

பணிகளில் 30% பாக்கி; முடிந்தால் நிரந்தர தீர்வு: சென்னை மக்களுக்கு ஸ்டாலின் உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மழைநீர் வடிகால், பணிகளில் 30 சதவீதம் பாக்கி இருக்கிறது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால், சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கிண்டி குதிரைப்பந்தய மைதானத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர். புதிய நீர்நிலையில் மழை நீர் சேகரிப்பது குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதையடுத்து, பள்ளிக்கரணை அருகே நாராயணபுரம் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jtysuk62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில், கை கொடுத்திருக்கிறது. திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., குழு அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஒரே நேரத்தில் முழுமையாக நிறைவேற்ற முடியாது. மழைநீர் வடிகால், பணிகளில் 30 சதவீதம் பாக்கி இருக்கிறது. வரும் காலத்தில் அதுவும் நிறைவு பெறும். மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால், சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுவும் விரைவில் நிறைவு பெறும். சென்னையில் மழை பாதிப்புகளை சமாளிப்பதற்காக 3 மாதங்களாக நடவடிக்கை எடுத்து வந்தோம். முழுவீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பல்வேறு துறை அதிகாரிகள் முழுவீச்சாக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

subbiah vellaisamy
அக் 17, 2024 11:50

Please dont think that if the 30% of the work is completed , It will give permanent solution. With out planning you are constructing the drainage works, Ultimately you are spoiling the resources and funds.


Lion Drsekar
அக் 17, 2024 11:35

குறுநில மன்னர்களின் பெயர்களே இல்லாத இடங்கள் இப்பொவுலகில் ஒன்று இருக்கிறது என்றால் அது இயற்கையில் உருவாகிய நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தேக்கங்கள் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே. முதன்முதலில் உருவாகப்போகிறது குதிரை பந்தைய மாதனத்தில் உருவாக்கப்பட்டுவரும் குளம், சரித்திரத்தில் பொறிக்கப்படும் பெயராக இருக்கும், வாழ்த்துக்கள், கவிஞர் பாரதியாரின் வரிகள் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா, சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய் அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பல பல நல்லழகுகள் சமைத்தாய், "நமக்குள் எழும் ஒரே கேள்வி அந்த 30% வேலையும் அப்போவே செய்திருந்தால் என்று, மனிதன் எப்போதுமே சும்மா இருப்பதில்லை, அப்படி முடித்திருந்தால் இவ்வளவு செலவு எய்து என்ன செய்திருக்கிறாரோ என்று கேள்விகக்கனைகள் வரும் என்று அறிந்த தீர்க்க தரிசிகள் , இந்த முப்பதில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கே ஆயத்தமாவார்கள் காரணம், பழையன கழிதலும்..... வாழ்க வளமுடன் , வந்தே மாதரம்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 17, 2024 09:46

அப்புறம் ஏதாவது சொல்லிடுவேன். ஓடிப்போயிரு.


vns
அக் 17, 2024 06:07

அந்த 30% உங்ககிட்டத்தானே அய்யா இருக்கு அந்த 30% வேலை முடியவே முடியாதே


Chandrasekaran Sriram
அக் 16, 2024 23:01

திருப்புகழ் "IAS" பரிந்துரைகளை வெளியிட்டு எழுபது சதம் முடித்ததை நிரூபிக்க முடியுமா ? பரிந்துரைக்காய் என்ன என்று தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு .


Murthy
அக் 16, 2024 20:12

ஆக அந்த 30% பணி முடிய இன்னும் 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்........


raja
அக் 16, 2024 19:36

20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் மழை வந்த சுவடே தெரியாது என்று சென்னை மக்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள் என்று உன் மங்குனி மாசு சொன்னாரே. அது அப்போ பொய்யா துக்ளக் மகாராஜ்....


raja
அக் 16, 2024 19:31

அப்போ மேயர் பிரியா சொன்ன 95 சதம் அமைச்சர் கே என் நேரு சொன்ன 97 சதம் அமைச்சர் சேகர் பாபு சொன்ன 98 சதம் எல்லாம் பொய் என்று முதல்வேர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லி விட்டார்.... தமிழா இதில் இருந்து இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கிவால் புற கொள்ளை கூட்டம் எவ்வளவு பொய்யர்கள் என்று நிருபனம் ஆகி விட்டது பார்... ஆமாம் இவர்கள் சொன்னதை வைத்து தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று யாரும் வழக்கு போட முடியாதா..


raja
அக் 16, 2024 19:22

எபுர்ரா... 4000 கோடியையும் முழுங்கிட்டு காசே இல்லாம 70 சதம் முடிச்சீங்க.... சூப்பர் மாடல் பா...


Raa
அக் 16, 2024 19:18

எண்கள் : எங்களை கூமுட்டை ஆக்கியத்தில் இதுமாதிரி செய்திகளுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 0 டு 9 எண்கள் ஒன்றாக ஒரு கேஸ் போடலாம் என்று உள்ளோம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை