உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடக்கப்பள்ளிகளில் 3,201 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி

தொடக்கப்பள்ளிகளில் 3,201 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில், 3,201 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கல்வி பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் தகுதி பெற்ற 2,342 பேர் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் பெறவுள்ளனர். இந்த நியமனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாறுதல் குழப்பம் வழக்கமாக, தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னரே, இடைநிலை ஆசிரியர் களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு இதற்கு நேர்மாறாக, இடைநிலை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற பிறகுதான், தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த நடைமுறை மாற்றத்தால், காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிய பிறகு, மாறுதல் கலந்தாய்வு நடத்தியிருந்தாலும், பெரும்பாலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும். டெட் தேர்வு மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் வாய்ப்புள்ளது. இதனால், கல்வி பணிகள் தொடர்ந்து பாதிக்கப்படும் சூழல் நீடித்து வருகிறது. ஆசிரியர்கள் கூறுகையில், 'தற்போது நடைபெற்ற கலந்தாய்வை மனதில் கொண்டு, எந்தெந்த பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன என்பதை அரசு முழுமையாக ஆராய்ந்து, குறிப்பாக, அந்த பள்ளிகளில் கல்வி பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னுரிமை அடிப்படையில் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமித்தால், கல்வி பணிகள் முழுமையாக பாதிக்கப்படாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
ஜூலை 22, 2025 11:04

அப்படியே employment office இல் நடக்கும் ஊழல் சரி செய்தால் நன்றாக இருக்கும். Additional & Renewal க்கு சென்றால் காணவில்லை என்று புதிதாக Registration செய்து மரியாதையில்லாமல் மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.


Kanns
ஜூலை 22, 2025 10:15

Abolish All Govt Posts as 95% Officials are Useless, Dont Fully & Became Power-Misusing Stooges of RulingParty Men. Fill Only on Contract Eith Appropriate Minm Wages NonInflated


vivek
ஜூலை 22, 2025 11:45

why english killing....


Raja k
ஜூலை 22, 2025 10:14

அதிமுக, திமுக கட்சிகளின் பித்தலாட்ட தனமே,, கல்விதுறையின் சீர்கேட்டுக்கு காரணம்,,,


தமிழ் மைந்தன்
ஜூலை 22, 2025 09:19

மாணவர்களே இல்லாமல் போலியாக ஆதார் வைத்து இயங்கும் தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 12.321 இவைகளை மூடுவது எப்படி? எப்போது?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 22, 2025 06:36

தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் நாட்டிற்கு எந்த கெடுதலும் இல்லை ..டாஸ்மாக் திறக்கபட்டு ..சரக்குகள குறைவில்லால் நிரப்பப்பட்டுள்ளதா ...என்று கவலை படவேண்டும் ..படிப்பது முக்கியமா? குடிப்பது முக்கியமா ?


முக்கிய வீடியோ