மேலும் செய்திகள்
ஜனநாயகன் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
3 hour(s) ago | 2
கவர்னரை விமர்சனம் செய்வது முறையல்ல; இபிஎஸ்
5 hour(s) ago | 12
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்
7 hour(s) ago | 52
திண்டுக்கல் நகராட்சி தலைவர் தி.மு.க., வேட்பாளர் நூர்ஜகான் பேகம். இவர், மனுத் தாக்கல் செய்த போது, மாவட்ட செயலாளர் ஐ.பெரியசாமியும் ஆஜர். 'தேர்தல் அதிகாரியின் அறைக்குள் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும்,' என, கெடுபிடி விதிக்கப்பட்டது. உள்ளே செல்ல, கட்சி நிர்வாகிகள் முண்டியடித்தனர். 'டென்ஷன்' ஆன பெரியசாமி, ''நான் கூட வெளியே நிக்கிறேன். நீங்க உள்ளே போங்க,'' என்றார், கோபமாக. நிர்வாகிகள் 'கப்சிப்' ஆயினர். தற்போதைய, நகராட்சி தலைவர் நடராஜன் கூட, அறைக்குள் செல்லாமல் ஒதுங்கி நின்றார். மனுத் தாக்கல் முடிந்தவுடன் வேட்பாளரிடம், ஐ.பெரியசாமி, ''அம்மா எங்கள் பணி முடிந்தது. இனி, பீரங்கி பிரசாரத்தை துவக்குங்கள்,'' என்றார் 'கூலாக'. 'லோக்சபா தேர்தல்ல, தோக்குற நிலையில இருந்த காங்கிரஸ்காரரை கூட, ஜெயிக்க வச்சாரு. ஆனா, சொந்தக் கட்சி வேட்பாளர, இப்பவே கழட்டி விடுறாரே,' என, முணுமுணுத்தார், ஒரு தொண்டர்.
3 hour(s) ago | 2
5 hour(s) ago | 12
7 hour(s) ago | 52