உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி ஆகிருக்காது: எல்.முருகன் பதிலடி

பா.ஜ., இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி ஆகிருக்காது: எல்.முருகன் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக போட்ட பிச்சையில் 4 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் கிடைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், 'பா.ஜ., மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது' என்றார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில், ''முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். 2026ல் தனியாக நின்று ஒரு சீட் ஜெயித்து பாருங்கள்'' என சவால் விடுத்திருந்தார்.இது பற்றி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது. பா.ஜ., ஓட்டுகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

பல்லவி
ஆக 24, 2024 02:53

வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை கேட்டிருக்கோம்


venugopal s
ஆக 23, 2024 10:59

பதில் கூற வேண்டும் என்பதற்காக அபத்தமாக பேசுகிறார். அதிமுக எதிர்க்கட்சி ஆகி இருக்காது என்றால் வேறு எந்தக் கட்சி ஆகி இருக்கும்? பாஜகவா?


T.sthivinayagam
ஆக 22, 2024 21:53

முருகன்சார் நீங்கள் ஏன் வட இந்தியர்கள் போல் நெற்றியில் திலகம் வைத்து உள்ளீர்கள் என் தமிழக ஹிந்துக்கள் கேட்கின்றர்


ஆரூர் ரங்
ஆக 23, 2024 10:39

நீங்க வெள்ளையர்கள் போல பேண்ட் சட்டை போடுறதில்லையா?


T.sthivinayagam
ஆக 22, 2024 21:47

இது தான் பிரபஞ்ச சூட்சும்ம் இல்லை என்றால் நீங்கள் இந்த புலோகத்தை சேர்ந்தவர் இல்லை கூறுவார்கள்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 22, 2024 21:15

ஒன்னும் கவலைபட வேண்டாம், அண்ணன் எடப்பாடி வண்டிய ஓட்டிட்டு போய் புளியமரத்தில் சாத்திட்டுதான் எறங்குவர்.


MADHAVAN
ஆக 22, 2024 20:38

தமிழக பிஜேபி இதை யாரும் தூக்கி சுமக்க தயாரில்லை,


MADHAVAN
ஆக 22, 2024 20:37

பிஜேபி என்பது செத்த பிணம், அதை தூக்கி சுமக்க அதிமுக தயாரில்லை,


திண்டுக்கல் சரவணன்
ஆக 22, 2024 19:54

ஆமா..பாஜக இல்லை என்றால் அதிமுக ஆளும் கட்சி ஆகிஇருக்கும்


Indian
ஆக 22, 2024 19:31

ப ஜா வுக்கு டெபொசிட்டே கிடைக்காது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 19:09

பிச்சை போடும் அளவுக்கு வசதி படைத்த பணக்காரர்கள் ஏன் நாற்பதில் ஒன்று கூட வெல்ல முடியவில்லை. அதிலும் பல இடங்களில் டெபாசிட் வேறு காலி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை