உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "அடி, மிதி, குத்து மனைவி மீது புகார்

"அடி, மிதி, குத்து மனைவி மீது புகார்

திண்டுக்கல் : மனைவி அடித்து துன்புறுத்துவதாக, கலெக்டரிடம், கணவன் புகார் அளித்தார். திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்தவர் மரியசேசுராஜ், 40. இவருக்கும், கொழிஞ்சுபட்டியை சேர்ந்த சேசுயம்மாளுக்கும், 38, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், மனைவி அடித்து துன்புறுத்துவதாக, கலெக்டர் நாகராஜனிடம் புகார் மனு அளித்தார். அதில், 'எனது மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். அவரை அழைக்கச் சென்றால் அடித்து விரட்டுகிறார். என்னை மிதித்து காயப்படுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்