உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்

நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானத்தில் பயணம் செய்த, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா போட்டோ வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார்.ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அவசர வேலையாக டில்லி செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவரது விமானம் டில்லி விமான நிலையத்தில் நெரிசல் காரணமாக, வானில் 3 மணி நேரம் வட்டமடித்தது. இதனால் உமர் அப்துல்லா கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.இது குறித்து அதிருப்தி தெரிவித்து, உமர் அப்துல்லா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லி விமான நிலையம் அலங்கோலத்துடன் காட்சி அளிக்கிறது. மன்னிக்கவும், அமைதியாக இருப்பதற்கான மனநிலையில் நான் இல்லை. ஜம்மு காஷ்மீரை விட்டு புறப்பட்டு 3 மணிநேரம், விமானத்தில் வானிலேயே பயணித்தபடி இருந்தேன். நான் பயணம் செய்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.அதிகாலை 1 மணியளவில் விமானத்தில் இருந்து கீழே இறங்கினேன். சற்று புதிய காற்று வீசியது. இந்த பகுதியில் இருந்து, எப்பொழுது கிளம்பி செல்வோம் என்பது தெளிவாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார். விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்தபடி செல்பி புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். இதன் பின்பு அதிகாலை 3 மணிக்கு டில்லி வந்துவிட்டேன் என உமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மீனவ நண்பன்
மே 09, 2025 08:41

பெங்களூரில் வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷன் விமான நிலையம் செல்லவே மூணு மணி நேரம் ஆகும்


Narasimhan
ஏப் 20, 2025 14:41

தரையிறங்குச்சு இல்ல? இதுபோல் இயற்கை சீற்றங்கள் உலகெங்கும் நடக்குது. பொது மக்களுக்கு புரியும் போது உங்களுக்கு ஏன் புரியவில்லை. நீங்க என்ன பெரிய அப்படக்கரா


r ravichandran
ஏப் 20, 2025 11:00

மோசமான வானிலை, புழுதி புயல் காரணமாக டெல்லியில் கடந்த 3 தினங்களாக 450 விமானங்கள் ரத்து செய்ய பட்டுவிட்டது. இது இயற்கையின் சீற்றம், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. முதல் அமைச்சர் மட்டும் அல்ல, சாதாரண பயணிகள் நிலையும் இது தான்.


Tiruchanur
ஏப் 20, 2025 11:10

சிந்திக்க வழியேது?


Padmasridharan
ஏப் 20, 2025 10:56

அப்பப்ப இவங்களுக்கு இந்த மாதிரி நடந்தாதான் சாதாரண மக்களுடைய வலி தெரிய வரும், எல்லா விஷயத்திலும்..


R Dhasarathan
ஏப் 20, 2025 11:28

ஆமாம் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஜீப் தான் சிறந்த வழி, நம் வேதனைகளை வலிகளை புரிந்து கொள்ள.....


Siva Balan
ஏப் 20, 2025 10:01

இவன் ஆளுங்க விமானத்தை கடத்தி எத்தனை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளான்.


இளந்திரையன் வேலந்தாவளம்
ஏப் 20, 2025 09:16

silver spoon born baby


Balasubramanian
ஏப் 20, 2025 09:13

அட, என்னமோ ஆகாயத்தில் இருந்து நேற்று தான் இந்தியா வந்து இறங்கிய மாதிரி பேசுறீங்க! நாங்களும் அவசர ஆபீஸ் வேலை காரணமாக போகும் போது இது போல நிகழ்வது உண்டு! பொறுத்தார் பூமி ஆள்வார்! பூமியில் பொன் மயமான காஷ்மீரை ஆளும் உங்களுக்கு சற்றும் பொறுமை இல்லையே!


Kasimani Baskaran
ஏப் 20, 2025 08:46

பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் இண்டிகோ ஒரு கேவலமான நிர்வாகத்தில் கீழ் இருக்கிறது.. விமான நிலையங்களும் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இல்லை. பாதுகாப்பு சோதனையில் சொதப்பல்கள் மிக அதிகம்.


Venkatasubramanian krishnamurthy
ஏப் 20, 2025 08:44

கொடுத்த காசுக்கு மேலாக வானில் அதிக நேரம் பயணம் நடந்ததற்கு பாராட்டவும் மனம் வேண்டும் உமர் அப்துல்லாரரே.


ديفيد رافائيل
ஏப் 20, 2025 10:36

மக்களோட பணத்தில் விமானத்தில் போறான், இவனோட சொந்த பணத்தில் போகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்


முக்கிய வீடியோ