36 படிப்பு பட்டியல் வெளியீடு
சென்னை:பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணையான 36 படிப்புகள் குறித்த பட்டியலை, உயர் கல்வி துறை செயலர் கோபால், பல்கலை துணை வேந்தர்களுக்கு அனுப்பி உள்ளார்.தமிழகத்தின் 30வது, 'ஈக்விவலன்ட் கமிட்டி' கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன் பரிந்துரைபடி, பி.எஸ்., தாவரவியல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., உள்ளிட்ட, 36 படிப்புகளுக்கு இணையான படிப்புகள் வரையறுக்கப்பட்டு, அதன் பட்டியலை, உயர் கல்வி துறை செயலர், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பி உள்ளார்.