உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் துறையில் மாரடைப்பிற்கு 38 பேர் பலி; தற்கொலையும் அதிகரிப்பு

போலீஸ் துறையில் மாரடைப்பிற்கு 38 பேர் பலி; தற்கொலையும் அதிகரிப்பு

மதுரை : தமிழக போலீஸ் துறையில் இந்தாண்டில் செப்டம்பர் வரை மாரடைப்பால் 38 பேர் பலியாகி உள்ளனர். இத்துறையில் டி.எஸ்.பி.,க்கள் 978 பேர், இன்ஸ்பெக்டர்கள் 3361, எஸ்.ஐ.,க்கள் 11,375, போலீசார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 624 என ஒட்டுமொத்தமாக டி.ஜி.பி., முதல் காவலர்கள் வரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 892 பேர் பணிபுரிகின்றனர். தொடர் பணி, இரவு ஷிப்ட், நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் போலீசார் பலர் 40 வயதை கடந்ததும் உடல்நல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க 'மாஸ்டர் ெஹல்த் செக்கப்' அரசு ஏற்பாட்டில் செய்து வருகின்றனர். இருப்பினும் உடல்நலம் பாதிப்பு தொடர்கிறது. இதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணம்.ஆள் பற்றாக்குறை, தொடர் பாதுகாப்பு பணி, குடும்ப சூழல் போன்ற காரணங்களால் போலீசாரும், அவர்களது குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஆனந்தம், மகிழ்ச்சி போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும் தற்கொலை, மாரடைப்பால் பலி தொடர்கிறது.இந்தாண்டு ஜன., 1 முதல் செப்டம்பர் வரை மாரடைப்பால் 38 பேர், தற்கொலையால் 34 பேர் பலியாகி உள்ளனர். உடல்நலம் பாதிப்பால் 91 பேர், விபத்தில் 50, புற்றுநோயால் 12 பேர் இறந்துள்ளனர். ஆகஸ்டில் மட்டும் 33 பேர் இறந்துள்ளனர். ஜனவரியில் 24 பேர், பிப்ரவரியில் 18, மார்ச்சில் 27, ஏப்ரலில் 27, மேயில் 22, ஜூனில் 24, ஜூலையில் 23, செப்டம்பரில் 28 பேர் இறந்துள்ளனர். 2020ல் 337 பேர், 2021ல் 414, 2022ல் 283, 2023ல் 313 பேர் மரணமடைந்துள்ளனர்.செப்., மாதத்தில் மட்டும் 28 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக மாரடைப்பு, விபத்தில் தலா 3 பேர், தற்கொலை 5, புற்றுநோய்க்கு 5, உடல்நலம் பாதிப்பால் 12 பேர் இறந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Narayanan Sa
அக் 08, 2024 21:42

போலீஸ் க்கு கூட தகுந்த பாதுகாப்பு கொடுக்க மாடல் அரசால் முடியவில்லை என்பது வெட்க கேடானது


நிக்கோல்தாம்சன்
அக் 08, 2024 14:11

தற்கொலை எனும் விஷயம் கவலைக்குரியது , மாரடைப்பு எனும் கொடிய நோய்க்கு பலவித காரணங்கள் உள்ளன , முதல் விஷயமாக நான் நினைப்பது கலைஞர் பானம் , இரண்டாவது வெளி உணவுகள் இரண்டையும் போலீசார் விட்டுவிட வேண்டும் , முடியுமா?


புதிய வீடியோ