உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரன் தேடுவோரிடம் பெண்கள் பெயரில் சாட்டிங் செய்து மோசடி; 4 பேர் கைது

வரன் தேடுவோரிடம் பெண்கள் பெயரில் சாட்டிங் செய்து மோசடி; 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மேட்ரிமோனியல்' இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, திருமணத்திற்கு வரன் தேடுவோரிடம், பெண்கள் பெயரில், 'சாட்டிங்' செய்து, 89 லட்சம் ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.'மேட்ரிமோனியல்' எனப்படும், திருமணத்திற்கு வரன் தேடும் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, வரன் தேடுவோரை குறி வைத்து, மர்ம கும்பல் பண மோசடி யில் ஈடுபட்டு வருகிறது. தேனியை சேர்ந்த வாலிபர் ஒருவர், செயலி ஒன்றில் தன் சுய விபரங்களை பதிவு செய்து, வரன் தேடி வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து, ஹரிணி என்பவர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.இருவரும், 'வாட்ஸாப்' எண்களை பகிர்ந்து, மணிக்கணக்கில் மனம் விட்டு பேசி வந்துள்ளனர். அப்போது, அந்த பெண், 'என் தந்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து, பல லட்சம் ரூபாயை இழந்து விட்டார். 'தற்போது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கிறது. நீங்கள் என் வருங்கால கணவர் என்பதால் சொல்கிறேன். எனக்கு கிரிப்டோ கரன்சி முதலீடுகள் குறித்து தெரியும். நீங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.அதை நம்பி, அந்த வாலிபர், 89 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதன் பின், தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்து, 1930 என்ற எண் வாயிலாக, சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில் புகார் அளித்தார். இதை விசாரிக்கும்படி, தேனி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு, டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகோபால், 30; யுவராஜன், 33; சிவா, 31, கோவையை சேர்ந்த பத்மநாபன்,32 ஆகியோரை நேற்று முன் தினம் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெண்கள் பெயரில், மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். உடன், கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து, 3.90 லட்சம் ரூபாய், ஆறு மொபைல் போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலை புத்தகங்கள், 46 சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் 12, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் நான்கு பேரும், கம்போடியாவில் உள்ள சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களின் கூட்டாளிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சிந்தனை
மார் 31, 2025 15:23

ஆகா அருமை நம்ம கல்வித்துறை தயார் பண்ற படிச்ச பசங்கள் எல்லாம் எவ்வளவு திறமையா இருக்காங்க நம்ப அமைச்சர்கள் மாதிரியே


Prasanna Krishnan R
மார் 31, 2025 09:41

இப்போதெல்லாம் எல்லா மேட்ரிமோனி ஆப்ஸும் போலியானவை. நானும் சமீபத்தில் ஒரு புகார் அளித்தேன். இதுபோன்ற குற்றவாளிகள் கொல்லப்பட வேண்டும்.


अप्पावी
மார் 31, 2025 08:16

வழக்கு பதிஞ்சு வெளில உட்டுருங்க. அடுத்த தடவெ வேற கேஸ் ல மாட்டும்போது இவன் மேலே ஏற்கனவே 10,12 கேஸ் இருக்குன்னு ஸ்டேட்மெண்ட் குடுக்க தோதா இருக்கும்.


Kanns
மார் 31, 2025 07:37

All Matrimony.Coms have atleast 50% Fake-Brides For Misleading-Cheating-Business Development Purposes. Police MUST Act on them Instead of Biasedly Harassing Men& People


மணி
மார் 31, 2025 04:55

89 லட்சம் குடுக்க மட்டும் தெரில இதுதான் படித்த


புதிய வீடியோ