உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத ஒதுக்கீடு

சிவகங்கை:தமிழக அரசு பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்க தமிழக அரசு வழி செய்தது. இந்நிலையில் அரசு பணியில் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்துள்ளது.இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு பணிகளில் பதவி உயர்வின்போதும் பணியிட மாறுதலின் போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, ஆட்டிசம், பிற மாற்றுத்திறனாளிகள் என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !