உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாவில் தவறான பெயரை மாற்ற 4 ஆண்டா? கலெக்டர் செயல்பாடு மீது ஆணையம் அதிருப்தி

பட்டாவில் தவறான பெயரை மாற்ற 4 ஆண்டா? கலெக்டர் செயல்பாடு மீது ஆணையம் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பட்டாவில் தவறான பெயர் பதிவானது தொடர்பான புகாரில், நான்கு ஆண்டுகளாக இறுதி உத்தரவு பிறப்பிக்காத, மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரின் பதில் ஏற்கும்படியாக இல்லை' என, மாநில தகவல் ஆணையம் கண்டித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன்.இவர், கடந்த 2021ம் ஆண்டில், வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பிய புகாரில், பனைமரத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட பட்டாவில், வேலுசாமி என்பதற்கு பதிலாக, மணி என்பவரது பெயர் பதிவாகியிருப்பதாக புகார் கூறியிருந்தார்.தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தான் அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து தகவல் கோரியுள்ளார்.இது தொடர்பான விசாரணையில் ஆஜரான பத்மநாபன், 'என் புகார் மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல், இதுநாள் வரை வழங்கப்படவில்லை. உரிய தகவலை வழங்க உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.பொதுத் தகவல் அலுவலர் கூறுகையில், 'அந்த மனு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கையில் உள்ளதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் கடிதம் வாயிலாக தகவல் வழங்கப்பட்டு உள்ளது' என்றார்.இந்நிலையில், இரு தரப்பினரையும் விசாரித்த பின், மாநில தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவு:புகார் அளித்து நான்கு ஆண்டுகள் ஆகியும், அதன் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்படவில்லை என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் கூறியதை, ஏற்க இயலவில்லை.எனவே, 60 நாட்களுக்குள், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர், புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும். அது குறித்த தகவலை, மனுதாரருக்கு அனுப்ப வேண்டும்.அதற்கான அறிக்கையை, அடுத்த ஆண்டு ஜன., 6ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், முன்னாள் மற்றும் இந்நாள் பொதுத் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.mohanraj raj
அக் 26, 2025 11:58

அலுவலக நடவடிக்கை இந்த லட்சணத்தில் தான் உள்ளது ஏதோ சில நபர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் அதையும் இந்த தற்குறிகள் விட மாட்டார்கள்


V RAMASWAMY
அக் 26, 2025 11:23

அரசு அலுவலகங்களில் உள்ளே நுழைந்து அதிகாரிகளைப்பார்ப்பதிலிருந்து காரியம் முடிந்து வெளியே வரும் வரை எதிலும் எல்லாவற்றிலும் லஞ்சம். ஒரு வாரிசு செர்டிபிகேட் வாங்குவதற்கு இவ்வளவு சொத்தின் மதிப்போ அதற்குத்தக்கவாறு அவர்கள் கொடுக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் அந்த செர்டிபிகேட் வாங்கமுடியும் என்கிற நிலை. மானங்கெட்டப்பிழைப்பு, இதற்கு ஒவ்வொரு அரசு ஊழியர் மேசையிலும் ஒரு திருவோடு வைக்கலாம்.


அப்பாவி
அக் 26, 2025 09:23

தகவல்.குடுக்க இன்னும் 60 நாட்களா? அப்பிடி என்ன வேலை இருக்கு அதிலே? நாடே ஏமாத்துக்காரர்கள் கையில் போயிடிச்சு.


Kasimani Baskaran
அக் 26, 2025 06:44

லட்சங்களில் லஞ்சம் கேட்டால் எத்தனை பேரால் மகிழ்ச்சியாக கொடுக்கம்முடியும்?


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
அக் 26, 2025 04:35

இங்கு தவறான பெயர் என்று எப்படி கண்டு பிடிப்பது? இதை உண்மையான நபர் யார் என்று முடிவு செய்வது? ஆணையம் மட்டும் தான? இல்லை கொள்ளை அடிக்கும் ஆளும் கட்சி நண்பர்களா? இல்லை எதிர்க் கட்சியாக இருந்தாலும் பதிவில் இருக்கும் எதிர்க்கட்சி MLA, MP, கட்சி நபர்களாக? இங்கு தமிழக அரசு என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் ஆளும், எதிர் கட்சி நபர்கள் தான். சரி யாரை நம்புவது இங்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை