மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
சென்னை:கைத்தறி துணிநுால் துறை சார்பில், சென்னையில் நேற்று நடந்த வாங்குதல் மற்றும் விற்பனை கண்காட்சியில், 40 கோடி ரூபாய்க்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்ய, ஒப்பந்தம் செய்யப்பட்டது.சென்னை தேனாம்பேட்டையில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில், வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை, துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்து, அதற்கான கையேட்டை வெளியிட்டு, இணைய தளத்தையும் துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டில்லி ஆகிய நகரங்களில், தலா 50 லட்சம் ரூபாய் செலவில், வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன் முதல் நிகழ்ச்சி, இன்றும், நாளையும் நடக்கிறது.இதில், 10 அரங்குகள் அமைக்கப்பட்டு, புதிய கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன; 282 ஜவுளி வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர். வாங்குவோர், விற்பனையாளர்களிடையே ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.மாலையில், பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 40 கோடி ரூபாய்க்கு, உற்பத்தியாளர்களிடம் இருந்து கைத்தறி ஜவுளிகளை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'பொங்கல் தொகுப்பில் இலவச வேட்டி சேலை வழங்குவதில், 78 சதவீதம் பாலியஸ்டர், 22 சதவீதம் பருத்தி மட்டுமே பயன்படுத்தி, அமைச்சர் காந்தி ஊழல் செய்திருக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு அமைச்சர் காந்தி அளித்த பதில்:பொங்கல் தொகுப்பில் வழங்கிய இலவச வேட்டி சேலையில், 2003ம் ஆண்டு அரசாணைப்படி, 60 சதவீதம் மட்டுமே பருத்தி நுாலும், 40 சதவீதம் பாலியஸ்டர் நுாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலை ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது, அதற்கேற்ப பேச வேண்டும் என்பதற்காக, நாங்கள் வைத்துள்ள தரவுகளை அறியாமல் அறிவில்லாது பேசி உள்ளார். இதற்கு முன், கைத்தறி துறை வெளியில் தெரியாமல் இருந்தது. கடை வாடகை கூட செலுத்தாமல், அ.தி.மு.க., அரசு போய் விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, 7 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை, 20 கோடி ரூபாய் லாபத்தில் இயக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
7 hour(s) ago | 1
7 hour(s) ago
8 hour(s) ago