உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 நாட்களில் 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்; பஸ் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

2 நாட்களில் 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்; பஸ் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் கடந்த 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நேற்று முதல் துவங்கியது. பொங்கலுக்காக வரும் (ஜன)14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று (ஜன.11) மட்டும் தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 4,107 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. சிறப்பு பஸ்களில் 2.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மொத்தம் 7,513 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 4.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
ஜன 12, 2025 11:14

முந்தி அடித்துக்கொண்டு மக்கள் செல்வது பெரியது அல்ல. இதனை எப்படி குறைப்பது என்பதுதான் முக்கியம். ஒரு குறிப்பிட்ட இடத்தில அதிகாரம் குவிந்துஇருப்பதை தவிர்க்கவேண்டும். .திருச்சி மதுரை நெல்லை சேலம் கோவை போன்ற பெரிய நகரங்களில் இவ்வளவு பெரிய கூட்ட நெரிசல் ஏன் இல்லை. அதிகாரம் பரவலாக இல்லை என்பதுதான்.


Sivagiri
ஜன 12, 2025 07:55

இந்த ஜெனெரசன், சொந்த ஊருக்குசெல்கிறார்கள், அடுத்த ஜெனெரசன் மக்களுக்கு, சொந்த ஊரு, சொந்தகாரங்க, அப்டி எதுவுமே இருக்காது. சோ, இவ்வளவு பஸ் தேவையோ இருக்காது


பிரேம்ஜி
ஜன 12, 2025 11:48

உண்மைதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை