உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சொந்த ஊர் சென்ற பல, 'குடி'மகன்கள் நண்பர்களுடன், மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் வாங்கினர்.இதனால், 30ம் தேதியும், தீபாவளி தினத்தன் றும், 430 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளிக்கு மட்டும், 220 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த, 2023ல், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என, இரு நாட்கள் மது விற்பனை, 467 கோடி ரூபாயாக இருந்தது.இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் அலுவலகங்கள் செயல்படவில்லை. இதனால், மது விற்பனை விபரம் குறித்த தகவல், முழுதுமாக கிடைக்கவில்லை. எனினும், மது வகை அனுப்பியது, ஊழியர்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையில், 430 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இந்த தீபாவளிக்கு, நான்கு நாட்கள் அரசு விடுமுறை வந்ததால், பலரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது வாங்குவதற்காக, தீபாவளிக்கு குறைவாக வாங்கி உள்ளனர். இதனால் தான், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது. மாதம், 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. அதில் சாதாரண மது வகை பங்கு, 65 சதவீதம், நடுத்தரம், 20 சதவீதம், பிரீமியம் வகை, 15 சதவீதம் இருக்கும். தீபாவளி தினத்தில், பிரீமியம் மது விற்பனை, 30 சதவீதமாகவும்; நடுத்தர வகை, 20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

R.Varadarajan
நவ 03, 2024 07:22

பட்டாசு வெடிக்க தடை விதிப்பது போல குடிக்கும் இரண்டு நாட்கள தடை விதிக்கவேண்டும். பண்டிகைக்கு துணிமணிகள், இனிப்புகள் வாங்கமுடியாமல் பணம் டாஸ்மாக்கிற்கு போய்விடுகிரது


Ramesh Sargam
நவ 02, 2024 20:20

ஆஹா என்ன சாதனை. இந்த சாதனை திமுகவினால் மட்டும்தான் சாதிக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என்று பொய்ப்பிரச்சாரம் செய்து, ஆட்சியை பிடித்து, பிறகு மதுவிலக்கு என்பதையே மறந்து, மாறாக, மது உட்பத்தி, விநியோகத்தை பெருக்கி, மக்களை குடிக்கவைத்து, குடும்பங்களை நடுத்தெருவுக்கு தள்ளி, பல பெண்டிர்களின் தாலியை அறுத்து... முடிவில் மது விற்பனையில் சாதனை படைக்கிறது இந்த கேடுகெட்ட திமுக அரசு.


Gokul Krishnan
நவ 02, 2024 12:16

கலைஞர் நகர் கலைஞர் பல்கலைக்கழகம் கலைஞர் பற்றிய பாடம் என்று வைக்கும் திராவிட அரசு ஏன் கலைஞர் டாஸ்மாக் பெயரை வைக்க தயங்குகிரது


சிவராஜ்
நவ 02, 2024 12:15

இந்த சாதனையை பற்றி தெரியாமல் தமிழக முதல்வர் போதை பற்றி காமெடி செய்து கொண்டு இருக்கிறார்.


selvelraj
நவ 02, 2024 11:52

இப்போது எங்கே போனார்கள் நமது முதல்வருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அவருக்கு எவ்வளவு அக்கறை என்பதை இப்போதாவது உணர்ந்தீர்களா? காசை கரியாக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் பட்டாசு வெடிக்கும் நேரம் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் டாஸ்மாக்கில் கூடுதல் பணியாளர் உதவியுடன் நல்ல collection. இது தெரியாமல் அவரைப்பற்றி அவதூறு பேசுவதை இப்போதாவது நிறுத்த வேண்டும்.


Indian
நவ 02, 2024 11:16

போட்டோ வை பார்த்தாலே தெரியுது ??


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 02, 2024 11:15

மது விற்பனை இலக்கை தாண்டி அதிக விற்பனை செய்ததற்காக தமிழக முதல்வரை பாராட்டி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் மறக்காமல் முஸ்லிம் கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லி மதச்சார்பின்மை அரசு நடத்தும் தமிழக முதல்வருக்கு பாரத் ரத்னா விருது வழங்கலாம். இது முடியாது என்றால் தமிழ் ரத்னம் என்ற பெயரில் தமிழக அரசே வழங்கலாம். திரு.திருமாவளவன் தமிழ் ரத்னம் விருது எடுத்து கொடுக்க முத்தரசன் வாங்கி முதல்வருக்கு கொடுக்கலாம்.


angbu ganesh
நவ 02, 2024 10:37

நானும் பார்க்கறேன் ஹிந்து பண்டிகைகளின் போது மட்டும் டாஸ்மாக் லாரிகள் அதிகமாக நடமாடுவதை பார்க்கிறேன் ஆக ஹிந்துக்களை அவன் இதில் அடிமை படுத்தி உள்ளன பார்த்தீர்களா ஹிந்துக்களே விழித்து கொள்ளுங்கள் உங்களை அந்த தீயமுகாவிடம் இருந்து காப்பாற்ற இன்னொரு நேதாஜியோ மஹாத்மாவோ வரப்போவதில்லை உங்களை நீங்கள்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் .


Srinivasan Ramabhadran
நவ 02, 2024 10:37

இதை ஒரு சாதனை செய்தியாக வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு, அரசு குடியரசு அன்று விருது வழங்கி கௌரவிக்க பரிந்துரை செய்கிறேன்.


AMLA ASOKAN
நவ 02, 2024 09:12

மது அருந்தும் பழக்கம் உலகம் முழுவதும் உள்ளது . இதனால் பணம் விரயமாகிறது , உடல்நலம் கெடுகிறது என்பதை அவர்கள் உணராமல் இல்லை . தமிழ்நாட்டில் மது அருந்துவது , சிகரட் பிடிப்பது , ஒரு நடிகரின் வெறிகொண்ட ரசிகனாவது , போர்னோ பார்ப்பது , ஆண் பெண்கள் இணைந்து நள்ளிரவு வரை பார்ட்டி நடத்துவது , கண்மூடித்தனமாக வங்கிகளில் கடன் வாங்குவது , ஆடம்பரத்தை விரும்புவது , பணத்தை வீண் விரையம் செய்வது போன்றவை தனிமனித சுதந்திரம் என போற்றப்படுகின்றது . அரசால் இதை தடை செய்ய முடியாது . நீதிமன்றங்கள் உடனே துணை வந்துவிடும் . இதெற்கெல்லாம் மதநம்பிக்கை அற்ற நிலை தான் காரணம் . மத நம்பிக்கை காரணமாகத்தான் ஒரு பிரிவினர் அசைவ உணவு உண்பதில்லை. அதே போன்று தான் முஸ்லிம்களும் மது அருந்துவதில்லை . அறிவு இருந்தும் , குடும்பத்தை பற்றிய அக்கறை இல்லாமல் , தெரிந்துகொண்டே தவறு செய்பவனை யாரால் என்ன செய்ய முடியும் ?


சமீபத்திய செய்தி