உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோட்டாவுக்கு ஓட்டு போட்ட 4.5 லட்சம் பேர்: ஸ்ரீபெரும்புதூர் முதலிடம்

நோட்டாவுக்கு ஓட்டு போட்ட 4.5 லட்சம் பேர்: ஸ்ரீபெரும்புதூர் முதலிடம்

சென்னை: தமிழகத்தில் நோட்டாவுக்கு 4.5 லட்சம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முதலிடத்தில் உள்ளது.ஒரு தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்காதவர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவது வழக்கம். அதற்கு அதிக ஓட்டுகள் பதிவானாலும், அதனால் எந்த பலனும் இல்லை. ஏப்., 19ல் தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் பதிவான ஓட்டுகள் நேற்று ( ஜூன் 04) எண்ணப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் நோட்டாவுக்கு 4,61,327 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டு சதவீதம் 1.06% நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவான தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு, நோட்டாவுக்கு 26,450 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவாகிய தொகுதிகள்

* ஸ்ரீபெரும்புதூர்- 26,450 * திண்டுக்கல்- 22,120 * திருவள்ளூர்- 18,978 *திருப்பூர்- 17,737 *தென்காசி- 17,165 * காஞ்சிபுரம்- 16,965 *சேலம் 14,894 * பொள்ளாச்சி- 14,503 * ஈரோடு- 13,983

20 தொகுதிகள்

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, மதுரை, அரக்கோணம், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 20 தொகுதிகளில் நோட்டாவுக்கு 10 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.கன்னியாகுமரியில் நோட்டாவுக்கு 3,755 ஓட்டுகள் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நாஞ்சில் நாடோடி
ஜூன் 05, 2024 16:30

போட்டி இட்டவர்களில் ஒரு நல்லவனை கூட அடையாளம் காண இயலாத இவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை...


நாஞ்சில் நாடோடி
ஜூன் 05, 2024 16:27

அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்களே நோட்டாவுக்கு வாக்கு கொடுத்துள்ளனர்...


MADHAVA NANDAN
ஜூன் 05, 2024 14:20

நோட்டாவில் ஸ்ரீபெரும்புதூர் முதலிடத்தில் உள்ளது அந்த தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் மீதுள்ள மிகப்பெரிய நம்பிக்கை இழப்பாக பார்க்கப்படுகிறது


MADHAVA NANDAN
ஜூன் 05, 2024 14:03

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இழப்பை இது காட்டுகிறது மற்றும் அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களை தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் .நல்லவர்கள் அறசெயல் செய்ய முனைய வேண்டும். அரசியல் அல்லஅறசெயல் சிறுமையாகி அறம் வெறுமையானதால் வந்த நிலைதான் இது.


Ramalingam Shanmugam
ஜூன் 05, 2024 15:27

இருப்பவர்களில் நல்லவர்களை தேர்தெடுங்கள் இந்த காலத்தில் 100% உத்தமர்கள் கிடைக்கமாட்டார்கள் முதலில் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்


மேலும் செய்திகள்