உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிகள்; ஏப்ரலில் பரிசோதனை

100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிகள்; ஏப்ரலில் பரிசோதனை

வாசிப்புத்திறன் வளர்ப்புக்கு, 100 நாள் சவாலை ஏற்ற, 4,552 துவக்கப்பள்ளிகளின் பெயர் பட்டியலை, தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் - 24,310, நடுநிலைப்பள்ளிகள் - 7,024 உள்ளன. இவற்றில் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேசிய கற்றல் அடைவு மதிப்பீட்டில், வாசிப்புத்திறன் மற்றும் கணித அடிப்படைத் திறனில், மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருந்தது. இதையடுத்து, 'மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தரத்தில் அல்ல; தமிழ், ஆங்கிலம் எழுத படிக்கக்கூட பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களுக்கு தெரியவில்லை' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.அதற்கு, 'கொரோனா சூழலால்தான் வாசிப்புத்திறனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என, தமிழக அரசு கூறிவிட்டு, துவக்கப்பள்ளிகளில் வாசிப்புத்திறன், கணித அடிப்படைத் திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, '100 நாள் சவால்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதில் பங்கேற்கும் பள்ளிகள், 100 நாட்களில், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன், கணித அடிப்படைத் திறனை அடைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனக்கூறி, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த சவாலில், 4,552 பள்ளிகள், கடந்த டிசம்பரில் பதிவு செய்தன. தற்போது, 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பொதுவெளி யில் மாணவர்களின் வாசிப்புத்திறன், கணித அடிப்படைத் திறனை சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சவாலில் பங்கேற்ற பள்ளிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 157 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.இதனால் அடுத்த மாதம், முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில், அந்த பள்ளிகளில் கலெக்டர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்னிலையில், தமிழ், ஆங்கில வாசிப்புத்திறன், கணித அடிப்படைத் திறன் சோதிக்கப்பட உள்ளது. - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
மார் 22, 2025 05:57

கொரோனா முடிந்து நாலு வருஷம் ஆனபிறகும் வாசிப்புத்திறன், கணித அறிவுக்குறைக்கு அதன் மேல் பழியைப் போடுவதா? மத்திய உணவு முடிந்ததுமே ஓட்டம் பிடிக்கும் மாணவர்கள் எத்தனை, பள்ளி நேரத்தில் அதிகப்படி business எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் ஆசிரியர்கள் எத்தனை இந்நிலையில் 100 நாளில் அவசரக்கோலம் அள்ளித்தெளித்து பத்து பிள்ளைகளைத் தயார் செய்து நிறுத்துவார்கள்


சுந்தர்
மார் 22, 2025 05:54

சுமார் 30000 பள்ளிகள் சவாலை ஏற்கவில்லை. இதிலிருந்து திறன் பிரச்சனை இருப்பது தெரிகின்றது. அடிப்படை மாற்றம் தேவை.


பாமரன்
மார் 22, 2025 05:42

அண்ணாமலை வார்டு தேர்தலில் கூட ஜெயிக்கல, நோட்டா கட்சி, என்றெல்லாம் வசை பாடும் உபிஸ், இதற்கு என்ன பதில். அண்ணாமலை யின் விமர்சனத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. அரசு பள்ளியில் உபி களின் குழந்தைகளும் ஏராளமாக படிப்பார்கள். மேன்மக்கள் மேன்மக்களே. திராவிட மாயையை வேரறுக்கும் ஈடு இணையற்ற ஒப்பற்ற உன்மையான தமிழ் இன தலைவர், வருங்கால பிரதமர், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை வாழ்க பல்லாண்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை