உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது விற்பனை தொகை முழுமையாக செலுத்தாவிட்டால் 50 சதவீதம் அபராதம்; 2 சதவீத வட்டி வசூலிக்க உத்தரவு

மது விற்பனை தொகை முழுமையாக செலுத்தாவிட்டால் 50 சதவீதம் அபராதம்; 2 சதவீத வட்டி வசூலிக்க உத்தரவு

சென்னை: 'மதுக் கடைகளில் ரொக்க பணத்தில் விற்பனை செய்த தொகை முழுதும், அடுத்த நாள் வங்கியில் செலுத்தப் பட வேண்டும். முழுமையாக செலுத்தாவிட்டால், விற்பனை தொகை கையாடல் என முடிவு செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'குறைந்த தொகை மீது, 50 சதவீதம் அபராதம், 2 சதவீதம் மாத வட்டி வசூலிக்க வேண்டும்' என, மாவட்ட மேலாளர்களுக்கு, 'டாஸ்மாக்' நிறு வனம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுக் கடைகளில் மதுபானம் விற்பனை, ரொக்கம், டெபிட் கார்டு, யு.பி.ஐ., வாயிலாக நடக்கும் நிகழ்வுகளில், மது பாட்டிலின் எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் மட்டுமே விற்க வேண்டும். முழு தொகையையும் அப்படியே, டாஸ்மாக் கணக்கில் செலுத்த வேண்டும். நடவடிக்கை கார்டு, யு.பி.ஐ., வாயிலாக மதுபானங்களின் எம்.ஆர்.பி., விலையை விட, கூடுதலாக ஏதேனும் தொகை பெறப்பட்டிருந்தால், அந்த தொகையை, மதுபானம் விற்றதன் வழியாக கிடைத்த ரொக்க பணத்தில் கழித்து, மீதித் தொகையை வங்கியில் செலுத்தக் கூடாது. முழு தொகையையும் செலுத்த வேண்டும். அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் கையடக்க கருவியில் உள்ள ரொக்க விற்பனை மற்றும் டிஜிட்டல் வாயிலாக நடந்த விற்பனையை, ஊழியர்கள் வங்கியில் செலுத்திய பணம் மற்றும் கருவியில் நடந்த விற்பனை விபரங்களை ஒப்பீடு செய்து, வேறுபாடு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். ரொக்க பணத்தில் விற்கப்பட்ட தொகை முழுதும் எந்த குறைபாடுமின்றி, அடுத்த நாள் வங்கியில் செலுத்தப் பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைபாடு இருந்தால், விற்பனை தொகையை கையாடல் செய்துள்ளதாக முடிவு செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவு தொகையை முழுமையாக வசூலிக்க வேண்டும். அத்துடன், குறைவு தொகை மீது, 50 சதவீத அபராத தொகை வசூலிப்பதுடன், 2 சதவீத மாத வட்டி வசூலிக்க வேண்டும். அபராத தொகை மற்றும் வட்டிக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டும். டிஜிட்டல் முறை ஒவ்வொரு நாளும், அந்த மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளில் அனைத்து மது விற்பனை விபரங்கள், டிஜிட்டல் முறை மற்றும் ரொக்க பணமாக பெறப்பட்ட விற்பனை தொகை விபரங்களை தொகுத்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும் ஒரு கடையில் மாறுபாடு இருந்தால், அக்கடையை அன்றைய தினமே முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை