மேலும் செய்திகள்
பிரியாணி சாப்பிட வந்த வாலிபரின் பைக் 'அபேஸ்'
14-Jan-2025
திருச்சி:திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள உடையான்பட்டி பி.ஜி.நகரில் வசிப்பவர் சாதனா, 38. இவரது கணவர் ரவிசங்கர் சென்னையில் ஐ.டி., துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாதனாவின், 14 வயது மகன் கிருஷ்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மதியம், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.மருத்துவமனையில் இருந்தபோது, தன் அலைபேசியில் வீட்டின் கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது, வீட்டின் அறையில் இருவர் 'மாஸ்க்' அணிந்து, பீரோவில் திருடிக் கொண்டிருந்தது தெரிந்தது.இதுகுறித்து அவர் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, தானும் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் பீரோவில் வைத்திருந்த, 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jan-2025