உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை

மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது. 'குரூப் - 4' தேர்வு பணியிடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கை:

கடந்த மூன்று ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வழியாக 34,384 பேர்; பல்வேறு அரசு துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறை நிறுவனங்கள் வழியாக 33,655 பேர் என, மொத்தம் 68,039 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது.அடுத்த இரண்டு ஆண்டுகளில், 75,000 பேரை நியமனம் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. குரூப் - 4 தேர்வை பொறுத்தவரை 6,244 என அறிவிக்கப்பட்டிருந்த காலியிடங்கள் தற்போது 6,724 ஆக அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், அரசின் முயற்சியால், 5 லட்சத்து 8,055 இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். 'நான் முதல்வன்' திட்டம் வழியாக, பொறியி யல், தொழில்நுட்பம், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிக்கும் 27.74 லட்சம் இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை பெற்று தரும் பணியை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மருந்து துறையில் 50,000

மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிலரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு துவக்கி வைத்து பேசுகையில், “மருந்து தரக் கட்டுப்பாட்டு துறையில் நிலவி வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும்,'' என்றார்.

மருந்து கட்டுப்பாட்டாளர் ஸ்ரீதர் பேசியதாவது:

தமிழகத்தில் மருந்துகளின் தரம், செயல் திறன், பாதுகாப்பு மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் என, தரக் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நடவடிக்கையையும் இணையம் வழியே மேற்கொண்டு வருகிறோம். இதன்படி, மருந்து உற்பத்தி, உரிமம் வழங்கல், புதுப்பித்தல் என 48,000 விண்ணப்பங்கள் இணையம் வழியே பரிசீலிக்கப்பட்டு உள்ளன.உலகளவில் முன்னணியில் உள்ள பைசர், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட 40 மருந்து நிறுவனங்கள், தமிழகத்தில் உற்பத்தியை துவங்கியுள்ளன. இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகளில் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
செப் 21, 2024 16:55

அந்த வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்ற உலகமகா உருட்டலை விட இது நம்பும்படி உள்ளது!


ஆரூர் ரங்
செப் 21, 2024 11:44

அவ்வளவு 200 அப்ரசண்டிகளா?


Kasimani Baskaran
செப் 21, 2024 07:15

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வேலை என்று சொன்னாள்க்கூட தமிழகன் கேட்டுக்கொண்டு சும்மாதான் இருக்கப்போகிறான். வேலை கொடுத்து சம்பளம் கொடுக்க பணமில்லை என்றால் திராவிடம் என்ன செய்யும்.


Mani . V
செப் 21, 2024 05:11

உருட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு. சும்மா 6 கோடி பேருக்கு வேலை அப்படின்னு உருட்டி இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை