மேலும் செய்திகள்
மங்களூரு, ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
12-Jan-2025
சென்னை:நாகர்கோவில் - தாம்பரம் உட்பட ஆறு சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.தெற்கு ரயில்வே அறிக்கை: நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர ரயில், நாளை முதல் ஜூன் 29 வரையிலும், தாம்பரம் - நாகர்கோவில் ரயில், வரும் 3ம் தேதி முதல் ஜூன் 30 வரையிலும் நீட்டித்து இயக்கப்படுகின்றன. தாம்பரம் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில், வரும் ஜூன் 27 வரையிலும், கொச்சுவேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், வரும் 9 முதல் ஜூன் 29 வரையிலும் நீட்டித்து இயக்கப்படும் தாம்பரம் - கோவை சிறப்பு ரயில், வரும் 14 முதல் 28ம் தேதி வரையிலும், கோவை - தாம்பரம் சிறப்பு ரயில், வரும் 16 முதல் மார்ச் 3ம் தேதி வரையிலும் நீட்டித்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12-Jan-2025