உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  60 பள்ளிகளில் மாணவர்களே இல்லை: அறிக்கையில் தகவல்

 60 பள்ளிகளில் மாணவர்களே இல்லை: அறிக்கையில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 60 பள்ளிகளில், மாணவர்களே இல்லை என, 'யூடிஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறையின், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான 'யூடிஸ்' சமீபத்தில் 2025 - 26ம் கல்வியாண்டின் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: * தமிழகத்தில், 60 பள்ளிகளில் மாணவர்களே இல்லை * மாணவர்களே இல்லாத, 40 பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் * தமிழகத்தில், 3,957 பள்ளிகள், ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன * ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில், 82,718 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர் * தமிழகத்தில் 57,566 பள்ளிகளில், 3,496 பள்ளிகளில் மட்டுமே, சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது * மொத்தமுள்ள 37,539 அரசு பள்ளிகளில், 27,634 பள்ளிகளில் மட்டும், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூலை 10, 2026 07:01

அவிங்களா? படிக்காத மேதைகள். பள்ளிக்கூடம் போகமலே பாஸ் ஆயிருவாங்க.


krish
ஜூலை 10, 2026 09:45

அப்பாவி கூட படிக்காத மேதை தான். ஆனால் வீட்டுக்கு கூட உபயோகமில்லை


Kasimani Baskaran
ஜூலை 10, 2026 04:01

அரசுக்கு அனைவரின் பிள்ளைகளும் நன்கு கற்று முன்னேற வேண்டும் என்ற அக்கறை இருக்கவேண்டும் - ஆனால் மாடல் அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பதிலேயே முழுக்கவனமும் இருந்தது. பிறகு பள்ளிகள் தூர்ந்து போகாமல் செழிக்கவா செய்யும். திராவிடம் என்பது சாராய வியாபாரமே... ஆனால் அதை பகுத்தறிவு என்று அறிவில்லாமல் ஏற்றுக்கொண்ட தமிழனை முழுவதுமாக திருத்த வேண்டும்.


sankaranarayanan
ஜூலை 10, 2026 01:39

சென்ற ஆட்சியில் அன்பே இல்லாத ஒருவரை அன்பில் மகேஷை பள்ளித்துறை அமைச்சராக அமர்த்தி படிப்பு வாசனையே இல்லாதவருக்கு எப்படி அய்யா பள்ளிகளை நிர்வாகம் செய்யமுடியம் நல்ல படித்த புத்திமான்கள் ஏராளம் ஏராளம் இருக்கையில் கட்சியில் ஒருவருக்கு அதுவும் துணை முதவரின் நெருங்கிய நண்பருக்கு கொடுக்க வேண்டுமென்றே கொடுத்ததன் விளைவுகள் ஏராளம் ஏராளம்


Ragupathy
ஜூலை 09, 2026 23:16

அரசுப்பள்ளி ஆசிரியர், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கண்டிப்பாக அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும்...இல்லையேல் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்க வேண்டும்...


Priyan Vadanad
ஜூலை 10, 2026 04:47

ஒகே. செய்ஞ்சிபுடுறேன் எசமான்.


gopi
ஜூலை 10, 2026 09:47

அடடா நம்ம பிரியனுக்கு பள்ளிக்கூட மணி அடிக்கிற வேலை குடுங்கப்பா. என்ன அறிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை