உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  65 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் குறையும்

 65 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் குறையும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துாத்துக்குடி, செங்கோட்டை, நாகர்கோவில் உட்பட, 65 விரைவு ரயில்களின் வேகம், வரும் ஜனவரி முதல் அதிகரிக்கப்படுகிறது. இதனால், ஐந்து முதல் 85 நிமிடம் வரை பயண நேரம் குறையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை:

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வருகிறது. ரயில் பாதைகள் மின்மயமாக்கும் பணிகள் நிறைவு, 'சிக்னல்' தொழில்நுட்பம் மேம்பாட்டு பணிகளால், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2026ம் ஆண்டு, 65 விரைவு ரயில்கள், 14 குறுகிய துாரம் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், ஐந்து நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும்.

எந்தெந்த ரயில்கள்?

கேரளா மாநிலம் கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில், 85 நிமிடம்; கோவை - ராமேஸ்வரம், 55 நிமிடம்; துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் உட்பட ஐந்து விரைவு ரயில்கள் தலா 50 நிமிடம் பயண நேரம் குறையும். நாகர்கோவில் - தாம்பரம், துாத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்கள், 45; ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர ரயில், 35 நிமிடம்; துாத்துக்குடி - சென்னை எழும்பூர், செங்கோட்டை - மயிலாடுதுறை தலா 30 நிமிடம்; ராமேஸ்வரம் - திருப்பதி, எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில்கள் தலா 25 நிமிடம்; சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர ரயில், செங்கோட்டை - எழும்பூர் பொதிகை, எழும்பூர் - குருவாயூர் உட்பட எட்டு விரைவு ரயில்களின் பயண நேரம், தலா, 20 நிமிடம் வரை குறையும். சென்னை சென்ட்ரல் - திருப்பதி உட்பட ஐந்து விரைவு ரயில்கள் தலா 15 நிமிடம்; எழும்பூர் - ராமேஸ்வரம் சேது, ராமேஸ்வரம் - எழும்பூர், எழும்பூர் - செங்கோட்டை, தாம்பரம் - மதுரை, திருசெந்துார் - எழும்பூர், திருச்செந்துார் - கேரளா மாநிலம் பாலக்காடு, செங்கோட்டை - ஈரோடு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு - சென்ட்ரல் உட்பட, 19 விரைவு ரயில்களின் பயண நேரம், தலா 10 நிமிடம் குறைகிறது. சென்ட்ரல் - புதுடில்லி, கோவை - சென்ட்ரல், சென்ட்ரல் - போடி நாயக்கனுார், திருச்சி - ராமேஸ்வரம், சென்ட்ரல் - திருப்பதி, தாம்பரம் - நாகர்கோவில் உட்பட 17 விரைவு ரயில்களின் பயண நேரம், தலா ஐந்து நிமிடம் குறைகிறது. இதற்கிடையே, திருநெல்வேலி - செங்கோட்டை உட்பட, 14 குறுகிய துாரம் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஐந்து முதல் 35 நிமிடங்கள் பயண நேரம் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணியர் ஏமாற்றம்

ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: புதிய கால அட்டவணையில், புதிய அறிவிப்புகள் இடம்பெறும். ஆனால், புதிய ரயில் சேவை, கூடுதல் நிறுத்தம் போன்ற அறிவிப்புகள் இல்லை. இது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அமல்படுத்திய பல்வேறு திட்டங்களே, புதிய அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய கால அட்டவணையில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயிலின் நேரம் மாற்றம் பற்றிய அறிவிப்பு இல்லை. அதேநேரத்தில், ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், நேரம் மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வகை ரயில்கள் இயக்கம் பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MANOJKUMAR V
டிச 30, 2025 14:35

ERS tatanagar express time improve panalam and IRTC la food sapadara mari ella athaiyum improve panalam. 36 to 38 Hours trainla travel panalum romba kastama eruku


MANOJKUMAR V
டிச 30, 2025 14:31

Tatanagar ernagulam express ethavthu time improve panalanalum sari ah na timeku poganum. Apm train food sapadara mari ella atha develop panalam athum ella enna than goverment panutho therila.


அப்பாவி
டிச 30, 2025 10:14

இப்பவே ராக்ஃபோர்ட், மங்களூர் எக்ஸ்பிரஸ்களை நடுராத்திரியில் இயக்கி நடுராத்திரிலே கொண்டு போய் உறக்கிடறாங்க. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் படும் கஷ்டம் இவிங்களுக்கு எங்கே புரியப்போகுது?


V Subramanian
டிச 30, 2025 10:05

எல்லோரும் மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி மக்களை எவ்வளவு பயித்தியம் ஆக்க முடியுமோ போட்டி போட்டுகொண்டு செய்வார்கள். சென்னை சென்ட்ரல் வரும் அனைத்து ரயிலும் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் out doorல் கட்டாயம் குறைந்தது 10 நிமிடங்களில் இருந்து 20,25 நிமிடங்கள் வரை நிறுத்தி விட்டுத்தான் சென்ட்ரல் நிலையத்திலேயே நுழையும். இத்தனைக்கும் அந்த ரயில் வரும் நாள் நேரம் எல்லாம் முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்டது. ஏன் நடைமேடை காலி இல்லை என்ன காரணம். கேட்டால் தொழில் நுட்ப கோளாறு. யாரும் கேட்கவும் முடியாது. இந்த லட்சணத்தில் பயண நேரம் 5 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை பயண நேரம் குறையுமாம். வேண்டாம் வாயில ஏதாவது வந்துடும் எனக்கு.


மேலும் செய்திகள்