உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாளையங்கோட்டை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில், தி.மு.க., மாநில நிர்வாகி உட்பட ஏழு பேருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில், பிப்., 23ல், தி.மு.க., மாநில பொறியாளர் அணி துணைச்செயலர் ராஜவர்மன் உட்பட ஏழு பேர், ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். மேலும், ஹிந்திக்கு எதிராக கோஷமிட்டனர்.இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர். நீதிபதி வழக்கை விசாரித்து, ஏழு பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஏழு பேரும் தலா, 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

venugopal s
ஜூன் 10, 2025 15:21

மூவாயிரம் பேரை மதக் கலவரம் என்ற பெயரில் கொன்றவர்களுக்கு தண்டனையே இல்லாமல் தப்பிக்க விட்டதை விட இந்த குற்றத்திற்கு இந்த தண்டனயே போதுமானது, நியாயமானதும் கூட!


Ganapathy
ஜூன் 11, 2025 10:43

3000 சீக்கியர்களின் கழுத்தில் எரியும் டயர்களை போட்டு கொன்ற கட்சியும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து எலிக்கறி துன்பம் சொன்ன கட்சியும்தானே இதற்கு காரணம். ஆனா தில்லியில் எம்பியா ஹிந்தி விளங்கவில்லைன்னு புளுகி வசதியாக வரிச்செலவில் வாழும் கேவலமான கட்சி ஆளுங்களுக்கு நீதிபதி மிகக்குறைந்த தண்டனை கொடுத்துள்ளார். இன்னமும்கூட கடுமையான தண்டனையை மக்கள் அவனுங்க செவுட்டுல அடுத்தவருசம் கொடுப்பர்.


lana
ஜூன் 10, 2025 13:20

இதனால் தமிழ் வளர்ச்சி பெற்று விட்டதா. கல்வி முந்திரி ன்னு ரசிகர்கள் மன்ற தலைவர் ஒருவரின் மகன் French படிப்பில் இருந்து தமிழ் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆ. மக்களுக்கு கொஞ்சம் ஆவது அறிவு வேண்டும். தமிழே இல்லாமல் இங்கு உயர் கல்வி வரை படிக்க முடியும். மாநில பாடத்திட்டத்தில் ஆங்கிலம் முதல் மற்றும் கட்டாய மொழி. இந்த லட்சணத்தில் தான் தமிழ் இங்கு வளருது.


lana
ஜூன் 10, 2025 13:16

இதை தூண்டி விட்ட கட்சிக்கு ஏன் அபராதம் அல்லது தேர்தலில் நிற்க தடை போன்ற தண்டனை கொடுக்க கூடாது. தமிழ் காக்க ஏன் எந்த ஒரு தார் பூச்சி போராட்டம் இலும் சின்னது கலந்து கொள்ள வில்லை. எனென்றால் பயம். நாளைக்கு தேர்தல் நிற்க தடை வருமா என்ற பயம். ஆனா 200 ருபாய் உ.பி களுக்கு அந்த பயம் இருக்காது.


V Venkatachalam
ஜூன் 10, 2025 12:19

கோவையில் இந்த வேலையை செய்தவன்களுக்கும் இதே தண்டனையா? அது பத்தி ஒண்ணும் நியூஸ் இல்லை. ஆர் பி எஃப் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. ஒருத்தனை யாவது காலில் சுட்டு இருந்தால் அவனவன் வேட்டியையே விட்டுட்டு ஓடியிருப்பானுங்க. இது தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிற கதையா இருக்கு. டூப்ளிகேட் மொழிப்போர் தியாகி பயலுவ லட்சணம் அப்பவே தெரிஞ்சிருக்கும்.


Padmasridharan
ஜூன் 10, 2025 11:02

அழிச்சவங்கள கொண்டு அத மறுபடியும் எழுதச்சொல்லியும் painting தானே இருக்கலாம் சாமி..


selvelraj
ஜூன் 10, 2025 10:56

அட இதெல்லாம் 200 ரூ உ.பிக்களுக்கு பெரிய விஷயமா? இந்த மாதிரி 10 போராட்டங்களில் கலந்துகிட்டா போச்சு.


மதுரை வாசு
ஜூன் 10, 2025 10:39

அபராதம் கட்டினதுக்குப் பதிலாக ஒரு மாதம் ஜெயிலுக்கு போயிருந்தா... ஜெயிலில் ராஜ மரியாதையும், ஓசி சோறும் கூடவே "மொழிப்போராட்ட தியாகி" பட்டமும் கிடைத்திருக்கும். விடுதலையாகி வரும்போது முதல்வரே தியாகி என்று பாராட்டி அறிக்கை விட்டிருப்பார்.


Ramesh Natarajan
ஜூன் 10, 2025 10:24

தண்டனை குறைவு. அதற்கு பதில் அவர்களையே பெயிண்ட் பண்ண சொல்லி இருக்கலாம்.


Krishnamurthy Venkatesan
ஜூன் 10, 2025 13:21

தமிழே வராது. இதில் ஹிந்தியை எழுத சொல்கிறீர்களே?


அப்பாவி
ஜூன் 10, 2025 10:01

பாட்னா, லக்னோ அகமதாபாத் ரயில்வே ஸ்டேஷன்களில் தமிழ்ல பேரை எழுதுங்க. ஜீ க்கு தமிழ் மேல் அவ்ளோ பக்தியாம். மரியாதையாம். ஆளுனர் அடிச்சு உடறாரே.


theruvasagan
ஜூன் 10, 2025 11:11

முதலில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் என் உயிர் மூச்சு என்று சொல்லுபவர்களை தங்கள் பெயர்களை தமிழில் மாற்றிக் கொள்ள சொல்லவும்.


Shekar
ஜூன் 10, 2025 09:19

ஐயோ பாவம் இவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்டப்போறாரோ? நீதி மன்றம் இவ்வளவு கடுமையான தண்டனை கொடுத்திருக்கப்படாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை