உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமச்சந்திரன், அவரது மகன், வங்கி அதிகாரி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, 2014 - 19ம் ஆண்டில் பதவி வகித்தவர் கே.என்.ராமச்சந்திரன்; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அவர், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக உள்ளார். அறக்கட்டளையின் கீழ், சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லுாரி இயங்குகிறது. அதன் தலைவராக, ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார்.அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்க ஒப்புதல் அளித்ததில், வங்கி அதிகாரி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், கடனுக்கு கைமாறாக, வங்கி அதிகாரியின் மகன் அமெரிக்கா செல்ல விமான டிக்கெட் கட்டணத்தை, கல்வி அறக்கட்டளை கணக்கில் செலுத்தியதாகவும், அதிகாரியின் குடும்பம் லண்டனில் தங்க, ராமச்சந்திரனின் கிரெடிட் கார்டு வாயிலாக ஓட்டல் அறை பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் மூத்த அதிகாரி தியாகராஜன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. வழக்கை, சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வங்கி அதிகாரி தியாகராஜனுக்கு, 5 ஆண்டு சிறை, 13 லட்சம் ரூபாய் அபராதம்; நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரனுக்கு, 7 ஆண்டு சிறை மற்றும் 15 கோடி ரூபாய் அபராதம்; ராஜசேகரனுக்கு, 7 ஆண்டு சிறை மற்றும் 1.10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மூவரும் மேல்முறையீடு செய்தனர். மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தன.விசாரணைக்குப் பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சி.பி.ஐ., தரப்பு வழக்கை நம்புவதற்கு கடினமாக உள்ளது; லண்டனில் உள்ள விடுதியில், ராமச்சந்திரனின் தயவில் தான் வங்கி அதிகாரி தியாகராஜன் தங்கியிருந்தார் என்பதை, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் நிரூபிக்கவில்லை. விடுதியில் தங்கியதற்கான கட்டணத்தை செலுத்த, அதிகாரி தியாகராஜனிடம் போதுமான பணம் இருந்தது என்பதை, மற்றொரு வங்கி உயர் அதிகாரி அளித்த வாக்குமூலம் வாயிலாக எளிதாக முடிவுக்கு வர முடிகிறது. இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அபராத தொகையை செலுத்தி இருந்தால், அவற்றை திருப்பி அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
செப் 29, 2024 14:07

மக்களுக்கு ஒரு நீதி ........ மக்கள் பணத்தை ஆட்டயப்போடும் அரசியல்வாதிகளுக்கொரு நீதி ........


பேசும் தமிழன்
செப் 29, 2024 13:42

ஆக மொத்தம் இந்தியாவில்.... குற்றவாளி யாருக்கும் தண்டனை கொடுக்க கூடாது.... அப்படி தானே ???.... நாடு விளங்கிடும்.


Jysenn
செப் 29, 2024 12:31

Purchasable commodity.


GMM
செப் 29, 2024 09:22

சிறப்பு நீதிமன்றம் சிபிஐ வழக்கின் அடிப்படையில் தண்டிக்கிறது. சிரிப்பு நீதிமன்றம் வழக்கை நம்ப கடினம் என்று கூறி விடுவிக்கிறது.? ஒரே சட்ட விதி. ஒரே வழக்கு . மாறுபட்ட தீர்ப்பு . மக்களுக்கு நீதி மீது நம்பிக்கை குறைந்துவிடும் . திராவிடர்கள் அறக்கட்டளை நடத்தும் அளவிற்கு தமிழக நிலை ? அறக்கட்டளை என்றால் என்னவென்று தெரியவில்லை. அறக்கட்டளைக்கு கடன் எதற்கு. ?கடன் வாங்கி கல்வி தானம் ? சிபிஐ பொதுமக்கள் சார்பாக பணியாற்ற நீதிமன்ற வழக்கு தடையாக இருக்க கூடாது. சிறை ரத்தை அரசு நிர்வாகம் நிறுத்த வேண்டும்.


KRISHNAN R
செப் 29, 2024 08:02

அப்படி போடு போடு


சாண்டில்யன்
செப் 29, 2024 07:58

கடன் வாங்கியது போலவே தீர்ப்பும் வாங்கி விட்டார்கள் கொடுக்கல் வாங்கலில் டாக்டர் பட்டம் பெற்றது அதிமுக


Sathyanarayanan Sathyasekaren
செப் 29, 2024 07:47

இந்த நீதிபதிகளை, அவர்கள் கொடுக்கும் இந்தமாதிரி தீர்ப்பை பார்த்தால், ஊழல் செய்த கொள்ளைக்காரர்களைவிட இவர்கள்தான் கேடுகெட்ட தருதலைகள்.


Kasimani Baskaran
செப் 29, 2024 07:39

[எப்படி எங்கு செய்து பிள்ளை பெற்றார் என்பதை படம் பிடித்து வழக்குப்போட்டால்தான் இவர்கள் ஒத்துக்கொள்வார்கள், டி என் ஏ பரிசோதனையை கூட ஏற்றுக்கொள்ளா மாட்டார்கள். ]ஒருவேளை 350 கோடி வீட்டை நினைத்து இதெல்லாம் ஒரு கொசு என்று வெளியே விட்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.


Bharathanban Vs
செப் 29, 2024 07:30

ஆஹா..... பண வசதியில்லாதவர்கள் தான் லஞ்சம் வாங்குகின்றனர்....


RAAJ68
செப் 29, 2024 07:20

ஆக. அ.தர்மம் வெல்லும்


A Viswanathan
செப் 29, 2024 08:46

super


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை