உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காரை இழுத்து சாதனை: 7 வயது சிறுவன் ‛அடேங்கப்பா...

காரை இழுத்து சாதனை: 7 வயது சிறுவன் ‛அடேங்கப்பா...

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் ஏழு வயது சிறுவன், 900 கிலோ எடையுள்ள காரை கயிறு கட்டி இழுத்து சாதனை படைத்தார்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ், மாரீஸ்வரி தம்பதியின் மகன் தேவசுகன்,7. இவர், ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அருகே, வால்பாறை ரோட்டில், கயிறுகட்டி காரை இழுத்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி ரவுத்திரம் தற்காப்பு கலை பயிற்சி மையம் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தின.மொத்தம், 2 நிமிடங்கள், 47 வினாடிகளில், 220 மீட்டர் துாரத்துக்கு, 900 கிலோ எடையுள்ள காரை கயிறு கட்டி இழுத்து சென்று சாதனை படைத்தார். மக்கள் ஆரவாரம்செய்து உற்சாகப்படுத்தினர்.சோழன் புக் ஆப் உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமலன் கூறுகையில், ''ஏழு வயதான தேவசுகன், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். சாதனை நிகழ்த்துவதற்கு முன்பாக, மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தசை நார்கள், மூட்டுகள், எலும்புகள் உறுதியாக இருப்பதாக சான்றிதழ் பெறப்பட்டது. அதன் பின், இந்த நிகழ்வு நடத்தப்பட்டது,'' என்றார்.சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ''இரண்டாம்வகுப்பு படிக்கும் தேவசுகன், ஏற்கனவே, மதுரையில், 200 மீட்டர் துாரம் கார் இழுத்து சாதனை படைத்தார். தற்போது, 220 மீட்டர் வரை இழுத்துள்ளார். சிறு வயது முதலே இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை