உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  75 ரயில் நிலையங்கள் வரும் 17ல் திறப்பு

 75 ரயில் நிலையங்கள் வரும் 17ல் திறப்பு

சென்னை : ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, தெற்கு ரயில்வேயில், 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், கடந்த ஆண்டில் திறக்கப்பட்டன. இதற்கிடையே, நாடு முழுதும் தயாராக உள்ள 75 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி வரும் 17ம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் வழியே திறந்து வைக்க உள்ளார். இதில், தமிழகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள, சின்னசேலம், சென்னை பூங்கா, குன்னுார் ஆகிய ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Seyed Omer
ஜூலை 15, 2026 23:38

ஆன்மீக தலமான திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு ஒரே ஒரு ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுகின்றன எனவே சென்னை திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டிணம் வழியாக திருச்செந்தூருக்கு பகல் நேர சேவை இயக்கப்பட வேண்டும் மேலும் திருசசெந்தூர் ரயில்நிலையத்தில் நடைமேடை கரடுமுரடாக உள்ளது சக்கரம் உள்ள சூட்கேஸ் பெட்டி எடுத்து போக சிரமமாக உள்ளது வாசலில் உள்ள படிகளில் சிலைடிங் படிகள் இல்லை ஒரே ஒரு வாசல் இருப்பதால் மெயின் வாசலில் வந்த வாகனங்களை நிறுத்தி விட்டு ரயில் ஏற ரொம்ப தூரம் நடக்க வேண்டியது உள்ளது ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்


முக்கிய வீடியோ