உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 8 கொலைகள்; தலைவர்கள் காட்டம்

ஒரே நாளில் 8 கொலைகள்; தலைவர்கள் காட்டம்

சென்னை,: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், மது குடிப்பதில் ஏற்பட்ட மோதலில், பிரகதீஸ்வரன் என்ற இளைஞர், அவரது கொலைக்கு பழிவாங்க கஸ்துாரி என்ற பெண் கொல்லப்பட்டுள்ளனர். தஞ்சை நடுக்காவிரியில் விஜய்; துாத்துக்குடி, அம்பலச்சேரியில் சுயம்புகனி; தென்காசி பாவூர்சத்திரத்தில் உமா; விருதுநகர் ஏழாயிரம் பண்ணையில் ராஜசேகரன்; பொள்ளாச்சியில் அஸ்வினி; கடலுாரில் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் எட்டு பேர், ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இதனால், தமிழகத்தின் எந்த பகுதியிலும், மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களே காரணம். ஆனால், போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவதில், எந்த அக்கறையும் இல்லாத தி.மு.க., அரசு, குற்றங்களை மூடி மறைப்பதிலும், பிரச்னைகளை திசை திருப்புவதிலும், ஆர்வம் காட்டுகிறது.மக்களை பாதுகாப்பதும், சட்டம்- - ஒழுங்கை நிலைநிறுத்துவதும் தான், அரசின் முதல் கடமை. அதை செய்யத் தவறிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பதாகக் கூறி, மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வரும், அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறையும் இயல்பு நிலைக்கு திரும்பி, சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அன்புமணியைப் போலவே பல தலைவர்களும் ஒரே நாளில் எட்டு கொலைகள் நடந்திருப்பதை கண்டித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 04, 2025 12:35

தமிழகத்தில் தினம் தினம் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு, பாலியல் துன்புறுத்தலுக்கு திமுக அரசின்மீது ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்று முதல்வர் கேட்பார்? ஆட்சி உங்களுடையது, முதல்வர் நீங்கள், காவல்துறை உங்கள் கீழ். அப்படி இருக்கும்போது நீங்கள்தானே அந்த குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்று பதில் கூறவேண்டும். அந்த குற்றங்களை தடுத்து நிறுத்தவேண்டும்.


புதிய வீடியோ