உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரமற்ற சாலைக்கு செலவு ரூ.91 லட்சம்

தரமற்ற சாலைக்கு செலவு ரூ.91 லட்சம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரத்தில் இருந்து ரெட்டியபட்டி செல்லும் சாலை பராமரிப்பின்றி கிடந்தது. கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.6 கி.மீ., சாலை 85.58 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டது. ஐந்தாண்டு பராமரிப்புத் தொகை 5.76 லட்சமும் இந்த சாலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சாலை அமைத்த சில தினங்களிலேயே சாலையின் தார் கற்களோடு பெயர்ந்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தரமான சாலை அமைக்க வேண்டும் என ரெட்டியபட்டி, மாதாராஜபுரம், சங்கரப்ப நாயக்கன்பட்டி, கன்னிமார்கூடம், நெடுங்குளம், பல்லாக்குளம் வேலாயுதபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை