உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 92,836 பேர் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 92,836 பேர் பயன்

சென்னை:தமிழகத்தில் நடந்து வரும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில், 92,836 பேர் பயனடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை, ஆக., 2ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஒவ்வொரு சனிக் கிழமைதோறும், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் பகுதி வாரியாக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில், ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட, பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பொது மருத்துவம், இதய மருத்துவம் உள்ளிட்ட, பல்துறை மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி முதல் நாளில், 44,418 பேர் பயனடைந்தனர். தொடர்ந்து, இரண்டாவது வாரமாக நேற்று மாநிலம் முழுதும் நடந்த முகாம்களில், 48,418 பேர் பயனடைந்து உள்ளனர். இதன் வாயிலாக இரண்டு வாரங்களில், 92,836 பேர் பயனடைந்து இருப்பதாக, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை