உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கே 95,000; இங்கே 17,000 தானா? டாஸ்மாக் ஊழியர்கள் கடுப்பு

அங்கே 95,000; இங்கே 17,000 தானா? டாஸ்மாக் ஊழியர்கள் கடுப்பு

சென்னை:தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொது செயலர் தனசேகரன் விடுத்த அறிக்கை:டாஸ்மாக் ஊழியர்களுக்கு, 40 சதவீதம் போனஸ் வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, 20 சதவீத போனஸ் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அண்டை மாநிலமான கேரளாவில், மது விற்பனையில் ஆண்டுக்கு, 20,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக வருவாய் கிடைக்கிறது. அந்த மாநில அரசு, மதுக்கடை ஊழியர்களுக்கு, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 95,000 ரூபாய் போனஸ் வழங்கியுள்ளது. இதை, தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில், ஆண்டுக்கு 52,000 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, 16,800 ரூபாய் மட்டுமே போனஸ் கிடைக்கும். எனவே, போனஸ் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, கூடுதல் போனஸ் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ