உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் 72 வயது மாணவர்

பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் 72 வயது மாணவர்

மயிலாடுதுறை : கல்வி கற்க வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதான ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர், சீர்காழி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.கடலுார் மாவட்டம், வடலுாரைச் சேர்ந்தவர் செல்வமணி, 72; நெய்வேலி என்.எல்.சி.,யில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எம்.காம்., -- எம்.பி.ஏ., -- ஐ.டி.ஐ., படித்தவர். இவருக்கு https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ekjuyi39&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு மகள்கள் உள்ளனர்.செல்வமணி பணி ஓய்வு பெற்று, 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், படிப்பின் மீதான ஆர்வம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்துார் சீனிவாசா சுப்பராயா அரசினர் தொழில்நுட்ப கல்லுாரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், வயதான தன் மனைவிக்கு தேவையான வீட்டு வேலைகளை செய்து விட்டு, மற்ற மாணவர்களை போல சுறுசுறுப்பாக தோளில் புத்தக பையை சுமந்து குறித்த நேரத்திற்கு கல்லுாரிக்கு வந்து விடுகிறார்.இவருடன் பழகும் மற்ற மாணவர்கள், தாத்தா என வாஞ்சையுடன் அவரை அழைக்கின்றனர். சக மாணவர்களுடன் வயது வித்தியாசம் பாராமல் சகஜமாக பழகும் செல்வமணி, தனக்கு தெரிந்தவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதுடன், தெரியாதவற்றை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதிலும் இளைஞரை போல் கல்லுாரியில் வலம் வரும் இவரை, சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மற்ற மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழும் செல்வமணியை, பேராசிரியர்கள் பாராட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பிரேம்ஜி
செப் 02, 2025 12:54

கிழவியை தூக்கி மனையில் வைத்த கதை! வெட்டி வேலை! வெற்றுப் பெருமை! பரவாயில்லை! முயற்சி பாராட்டுக்குரியது!


Natchimuthu Chithiraisamy
செப் 02, 2025 12:21

படிக்கட்டும் கல்லூரியின் தரம் ரேஷன் அரிசி போல் இருக்கக்கூடாது. சம்பளம் வாங்கும் பேராசிரியர்கள் நன்றாக சொல்லி கொடுங்கள். அரசு பணம் வீணாகக்கூடாது.


Murugan
செப் 02, 2025 11:49

குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது . இவர் யாருடைய சீட்டை பயன்படுத்தி வந்து இருக்க மாட்டார் இப்போது எல்லாம் சேர்வதற்கு யாரும் வருவதில்லை


senthil jeevi
செப் 02, 2025 11:45

கற்பதற்கு வயது ஒரு தடையில்லை


VSMani
செப் 02, 2025 10:34

72 வயதில் பாலிடெக்னிக் லில் படித்து இவர் என்ன செய்யப்போகிறார். ஏற்கெனெவே வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவருக்கு ஒரு சீட் கொடுத்து இளம் மாணவர் ஒருவரின் பாலிடெக்னிக் படிக்கும் சீட் வீணாகிவிட்டது.


Thravisham
செப் 02, 2025 10:57

தங்கள் கருத்து தவறானது


Sridharan P
செப் 02, 2025 09:34

I saw a news In the last NEET Exam 40 year lady passed and got admission. now 72 Year person got admission in polytechnic college. How these elder people are getting admission, where is age limit rules. Moreover what is use of giving admission to these kind of elderly peoples .


W W
செப் 02, 2025 08:42

உங்கள் ஆர்வத்தை கண்டு வணங்குகிறேன் ஐயா


Rajarajan
செப் 02, 2025 06:11

வணங்குகிறேன்.


raja
செப் 02, 2025 03:42

வழத்துக்கள்