வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வனப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, வனவிலங்குகள் இருக்கும் இடத்தில் நாம் ஏன் நடைப்பயிற்சி செய்யவேண்டும். அவரின் ஆன்மா சாந்தியடையிட்டும்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே தாளியூரில் இன்று (ஜன.,23) காலை வாக்கிங் சென்ற நடராஜ், 69, என்ற வியாபாரி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் துடியலூர் அருகே தாளியூரில் பகுதியில் நடராஜ் (வயது 69) என்ற வியாபாரி வாக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானையின் கால் தடம் போன்ற தடயங்கள் நடராஜ் மீது இருந்தது தெரியவந்தது. சம்பவ நடந்த இடம் வனப்பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. நடராஜ் உடலை மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாக, யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வனப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, வனவிலங்குகள் இருக்கும் இடத்தில் நாம் ஏன் நடைப்பயிற்சி செய்யவேண்டும். அவரின் ஆன்மா சாந்தியடையிட்டும்.