உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு இல்லாத கூட்டம் வதந்திகளை பரப்பும்: ஸ்டாலின்

வரலாறு இல்லாத கூட்டம் வதந்திகளை பரப்பும்: ஸ்டாலின்

சென்னை:'ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் இண்டியாவின் வெற்றியும் அமையும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தமிழகத்தில் முதலீடு செய்துள்ள ஸ்பெயின் நாட்டு நிறுவனத்தினரை தனித்தனியாக சந்தித்து பேசினேன்.தமிழக அரசின் தொழிற்கட்டமைப்பின் மீது, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, 1,440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள், தமிழகத்திற்கு வரவிருக்கின்றன.ஸ்பெயின் நாட்டின்வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், பிராடோ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதை சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற்றை திரிக்கும்; பண்பாட்டை சிதைக்கும்; மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும்; வதந்திகளை பரப்பும்; அவதுாறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும். உண்மை வரலாறை சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, மக்கள் தங்களின் ஓட்டுரிமையால் விரட்டி அடிப்பர்; அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பர்.பயணம் என்பதுஉலகத்தை காண்பதற்கான ஜன்னல். நாம் அறியாத பல செய்திகளை, நமக்கு நேரடியாக கற்றுத் தருவதற்கு, பயணத்தை போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது.தலைவன் வெளிநாடு சென்றிருந்தாலும், தலைமையின் உத்தரவை நிறைவேற்றுவோம் என்கிற உணர்வும், கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் ஒற்றுமையும் இருக்கும் வரை, எந்தக் கொம்பனாலும் தி.மு.க.,வை வீழ்த்த முடியாது. ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது போல, தேர்தல் களத்தில், 'இண்டியா'வின் வெற்றியும் அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி