UPDATED : அக் 22, 2025 12:53 PM | ADDED : அக் 22, 2025 10:24 AM
சென்னை: தமிழகத்தை ஒட்டி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்தது. புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது. இந்த சூழல், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1bwpoywd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், வட தமிழகம், புதுச்சேரி வழியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை.இதே சமயத்தில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பதை வானிலை மையம் கண்காணித்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.