உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணியம் பெயரில் கண்ணியம் கெடுக்கும் படம் ; வரப்போகுது ‛‛பேட் கேர்ள் :‛‛டீசிங் செய்யும் ‛‛டீசர்! கமென்ட் பண்ணுங்க வாசகர்களே...!!

பெண்ணியம் பெயரில் கண்ணியம் கெடுக்கும் படம் ; வரப்போகுது ‛‛பேட் கேர்ள் :‛‛டீசிங் செய்யும் ‛‛டீசர்! கமென்ட் பண்ணுங்க வாசகர்களே...!!

‛‛எங்கே செல்லும் இந்தப் பாதை...'' என்று தமிழ் சினிமாவில் ஒரு பாடல் உள்ளது. அதைப் போலவே இப்போது தமிழ் சினிமா எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் வருகின்றன. இவற்றில் பத்து சதவீதம் கூட தேறுவதில்லை. ஒரு பக்கம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட படங்களும், இன்னொரு பக்கம் ஜாதி ரீதியான பிரிவினையை தூண்டும் படங்களும் அதிகம் வர துவங்கி உள்ளன.இவைகள் தவிர்த்து ஆபாசமான குப்பை படங்கள் தனி ரகம். ஏற்கனவே, ‛இருட்டு அறையில் முரட்டு குத்து, 90 எம் எல்' போன்ற ஆபாச கலாச்சார சீரழிவு படங்கள் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தன. இப்போது பெண்ணியம் பேசுகின்றோம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களையும் மாணவிகளையும் சீரழிக்கும் விதமாக ‛பேட் கேர்ள்' என்ற ஒரு ‛பேட்' படம் வெளிவரப் போகிறது.இந்த படத்தின் வண்டவாளம் டீசர் மூலம் தண்டவாளத்தில் ஏறியது. சமீபத்தில் வெளியான இந்த டீசரில் பள்ளியில் படிக்கும் மாணவியாக நடித்துள்ள நாயகி அஞ்சலி சிவராமன் என்பவர், ‛பள்ளியில் கிளாஸ் லீடராக இருப்பதைவிட பாய் பிரண்ட் இருப்பது தான் மாஸ்....' எனக் கூறுகிறார். அது மட்டுமல்ல அவர் பார்ட்டி போவது, தண்ணி அடிப்பது, செக்ஸ் வைத்துக் கொள்வது... என சகலமும் செய்கிறார். அவர் குழுவில் ஒரு பெண், ‛எல்லா ஆண்களையும் கொல்லணும்' என்கிறார் அதற்கு இன்னொருவர் ‛ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்' என்கிறார்.வீட்டில் பெற்றோர் கண்டித்தால் ‛நீ எதை செய்யக் கூடாதுன்னு சொல்றியோ நான் அதைத்தான் செய்வேன், என்னை தடுக்க நினைத்தால் அந்த பையனுடன் ஓடிப் போவேன். தற்கொலை செய்வேன்' என மிரட்டும் காட்சிகளும் டீசரில் உள்ளன. இரண்டு நிமிட டீசரிலேயே இதுபோன்ற கண்றாவியான விஷயங்கள் உள்ளன என்றால் மொத்த படத்தில் இன்னும் என்னென்ன சொல்லித் தொலைத்திருக்கிறார்ளோ தெரியவில்லை.டீசரில் வரும் கதாநாயகி, பிராமண பெண்ணின் பேச்சுவழக்கில் பேசுகிறார். சில குறியீடுகளும் அதை குறி்ப்பிடுவது போல் காண்பிக்கப்படுகின்றன.இப்படியொரு டீசர் வெளியானதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பி உள்ளன. நேற்று முதல் இந்த படத்தை வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். பெண்ணியம் பேசுகிறோம் என ஏன் இந்த மாதிரி படங்களை எடுக்கிறீர்கள் என இந்த படத்தை தயாரித்துள்ள தமிழ் இயக்குன வெற்றிமாறன் மற்றும் ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரையும், இந்த படத்தின் டீசரை தங்களது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் விஜய்சேதுபதி போன்றோரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இதில் இன்னொரு கொடுமையான விஷயம், இந்த படத்தை இயக்கியிருப்பது ஒரு பெண். அவர் பெயர் வர்ஷா பரத். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது, ‛‛பெண் என்றால் ஒரு பூ, பத்தினி, தெய்வம், தாய்மை... இது மாதிரி நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்களை எல்லாம் தூக்கி சுமக்க வேண்டாம் என நினைக்கிறேன்'' என தெரிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.‛‛படிப்பு தான் நம்மல காப்பாத்தும். நல்லா படி முன்னுக்குவானு சொன்ன வெற்றிமாறன் இப்ப பணம் புகழ் எல்லாம் வந்த பிறகு இப்படியொரு கேவலமான சிந்தனைகளை சமூகத்தில் விதைக்குறார்''‛‛என்ன முட்டாள்தனம் இது வெற்றிமாறன். இப்படி ஒரு படத்தை தயாரிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா. பள்ளி செல்லும் குழந்தைகளை இதுபோன்ற கேவலமான திரைப்படங்களைப் காட்டி கெடுக்காதீர்கள். நம் தமிழ்நாட்டுக்கு பேட் கேர்ள் போன்ற படம் தேவையில்லை. இது பெண்ணியம் அல்ல'' என பலரும் வெற்றிமாறனுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.பெண்ணுரிமை பற்றி பேச எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் விடுத்து குடிப்பது, புகை பிடிப்பது, பாய் பிரண்ட் வைத்துக் கொண்டு அவர்களுடன் சுற்றுவது, சல்லாபத்தில் ஈடுபடுவது என பெண்ணியம் என்றால் என்ன என்று தெரியாமல், ஆபாச படத்தை எடுத்துள்ளனர்.கதை இல்லாதவர்கள் தான் சதையை வைத்து படம் எடுப்பார்கள். இதுவும் அப்படிப்பட்ட படமா என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் எப்படி கொடுத்தார்கள்?வாசகர்களே... இந்த பட டீசர் மற்றும் படம் தொடர்பான உங்களின் மேலான கருத்துக்களை செய்திக்கு கீழே பதிவிடலாம்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 395 )

Ramachandran
ஜூலை 22, 2025 09:27

A very bright future for TN: Drug culture, free sex and incest, alcohol addiction. Vetri maran should encourage his daughters to follow the footsteps of women acters in the movie as he advocates


DARMHAR/ D.M.Reddy
பிப் 25, 2025 05:40

Decency in the expression of ones views on this picture Bad Girl has gone to the gutters.


Velu Mandhimuthiriyar
பிப் 18, 2025 22:16

வித்தியாசமாக எடுக்கலாம் என்று எடுத்தார்களோ என்னவோ


shakti
பிப் 18, 2025 14:14

இப்போதுதான் கேள்விப்பட்டேன்....


murali
பிப் 14, 2025 07:38

PUBLIC SHOULD BOYCOTT THIS MOVIE, THEATRE / OTT PLATFORM OR WHEREVER THIS MOVIE SCREEN


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 13, 2025 14:55

வெற்றிமாறனை....


V.Mohan
பிப் 05, 2025 18:25

இயக்குனர் வெற்றிமாறன் எடுத்த படங்களில் எல்லாம் சண்டையும் இரத்தமும் தான் நாயக நாயகியர். சரி சமுதாயத்தில் பின்னால் தள்ளப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் விஷயங்களையும் விவகாரங்களையும் படமெடுக்கிறார் என்று நாம் நினைத்துக்கொண்டு அவருடைய படங்களை மரியாதையுடன் பார்த்தால், அவர் ஏன் இப்படி திடீரென்று ஒரு சாதியை மட்டும் குறைத்து காட்டும் படத்தை தயாரித்தார் என்று தெரியவில்லை.? தற்சமயம் ஒழுக்க குறைவுகளுக்கு நியாயம் கற்பிக்கும் எண்ணங்கள் பாமர மக்கள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களிடமும் பரவ ஆரம்பித்துள்ளது. குறைகளை நியாயமாக சுட்டிக்காட்டி இளைய சமுதாயத்தையும் மக்களையும் சரியான பாதையில் செல்லுவதற்கு ஊக்குவிக்கும் கதைகளை சாதி அடையாளங்களின்றி திரைப்படங்களாக வெற்றிமாறன் எடுக்கலாம் . அவரிடம் அதற்கான திறமையும் பொறுமையும் இருக்கிறது. வடக்கத்திய அனுராக் காஷ்யப் என்பவர் எதிர்க்கருத்து உள்ள படங்களையும், ஓ.டீ டீ க்காக தேவையான சென்சார் இல்லாத படங்களை எடுக்கும் ஆசாமி. அவர் வலையில் வெற்றிமாறன் விழுந்தது துரதிருஷ்டவசமானது. வடக்கில் ஒழுக்க குறைவான படங்களை பெரிய திரையில் காட்ட அனுராக் கஷ்யப்பிற்கு நெஞ்சு துணிச்சல் இல்லை . அதனால் அவர் தமிழ் படத்தில், அரசியல் பலமற்ற பிராமண சாதியை இழிவாக காட்ட துணிந்துள்ளார்.


sankar
பிப் 05, 2025 09:09

அந்த டைரக்டர் பெண்மணியின் சுய சரிதையா. சூப்பரா இருக்கே.


vishnumythili mythili
பிப் 04, 2025 14:15

படம் எடுத்தவர்கள் அவர்களுடைய ....


Tetra
பிப் 04, 2025 12:57

இந்த தருதலை பசங்க படங்களை புறக்கணியுங்கள்.


புதிய வீடியோ