உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்ல கூட்டணி அமையும்; தொண்டர்கள் தான் எல்லாமே என பொதுக்குழுவில் ராமதாஸ் உருக்கம்

நல்ல கூட்டணி அமையும்; தொண்டர்கள் தான் எல்லாமே என பொதுக்குழுவில் ராமதாஸ் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: 'தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணி அமையும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள் தான்' என பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் தெரிவித்தார்.புதுச்சேரி பட்டானூரில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க கூட்டம். கடந்த கால நிகழ்கால எதிர்கால எல்லாமே நீங்கள்தான். காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல. இதுவல்லவோ கூட்டம், இதுவல்லவோ பொதுக்குழு என்ற அளவுக்கு கூட்டம் கூடி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5xgwhuqo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது போன்ற ஒரு பொது குழு கூட்டம் நடந்ததில்லை. உணர்ச்சி கொந்தளிக்க நீங்கள் கூடி வந்துள்ளீர்கள். பாமக சிறப்பு பொது குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள 37 தீர்மானங்கள் 8 கோடி தமிழ் மக்களுக்கான தீர்மானங்கள் ஆகும்.

சிறைகளுக்கு...!

37 தீர்மானங்களும் தமிழகத்திற்கானது. பாளையங்கோட்டை சிறையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து சிறை சாலைகளுக்கும் சென்று வந்தவன் நான். தமிழகத்தின் எல்லா பிரச்னைக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று எதிர்பார்க்கின்றனர். கருணாநிதி கொடுத்த இருபது சதவீத இட ஒதுக்கீட்டில் 115 ஜாதிகள் பயன்பெற்றுள்ளனர்.

வீண் போகாது

அனைத்து சமுதாய மக்களும் என் பின்னே வாருங்கள். தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி முடிவில் சிறப்பாக செயலாற்றுவேன். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. கூட்டணி தொடர்பாக உங்களை நான் கேட்டு தான் முடிவு எடுப்பேன்.

நல்ல கூட்டணி

எந்த கூட்டணிக்கு சென்றால் வெற்றி கிடைக்கும் என பாமக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணியை அமைப்பேன். பாமகவினரின் மனங்களை அறிந்த டாக்டர் நான். பாமகவினரின் மனங்களை எக்ஸ்ரே செய்து கூட்டணி முடிவு எடுப்பேன். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். முதல்வர் நினைத்தால் ஒரு வாரத்தில் இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியும். ஜாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு நினைத்தால் நடத்தலாம்.

தட்டி கழிக்கிறீர்கள்

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். சிறுபிள்ளைகள் கூட 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்ன ஆச்சு என என்னை கேட்கிறார்கள். சிறுவர்கள் மனதிலும் அது பதிந்து விட்டது. நான் காட்டிய வழியில் வாருங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஜாதி வாரி கணக்கெடுப்பு மத்திய அரசுதான் எடுக்க முடியும் என தட்டிக் கழிக்கிறீர்கள். தமிழக அரசு நினைத்தால் முடியும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vbs manian
ஆக 17, 2025 18:39

நல்லா கனவு காணுங்க.


vns
ஆக 17, 2025 16:52

19ஆம் நூற்றாண்டு கொள்கைகளை 21ஆம் நூற்றாண்டில் நடைபடுத்த நினைக்கும் ராமதாஸ் தலைவனா ?


Jack
ஆக 17, 2025 15:24

செந்தில் கவுண்டமணி காமெடி இவுங்க காமெடிக்கு ஈடாகாது


SUBBU,MADURAI
ஆக 17, 2025 15:13

முன்பெல்லாம் பொதுக் கூட்டத்துக்குதான் காசு கொடுத்து ஆட்களை கூட்டி வருவீங்க! இப்பெல்லாம் மண்டபத்துல நடக்கிற கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கே காசு கொடுத்து ஆளுங்களை இழுத்துட்டு வர ஆரம்பிச்சிட்டீங்களா? கட்சி இனிமே உருப்பட்ட மாதிரிதான்...