உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!

கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது. அ.தி.மு.க., தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தியது.சட்டசபையில் இன்று (மார்ச் 26) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அப்போது கூட்டணி கணக்கு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.அ.தி.மு.க., கடம்பூர் ராஜு: அ.தி.மு.க., என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

கணக்கு கேட்ட கட்சி தான். ஆனால், இப்போது அ.தி.மு.க., தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலாக தெரிவித்தார்.இதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'எம்ஜிஆர்., ஜெயலலிதா வழியில் இ.பி.எஸ்., போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்' என பதில் அளித்தார். இவ்வாறு உரையாடல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Annamalai
மார் 26, 2025 17:47

தப்பாக கணக்கு போட்டதால் தோல்வி பெற்று இப்போ டியூஷன் போய் சரியாக கணக்கு போட்டு பாஸ் ஆகப்போவதை நிதி அமைச்சர் கண்டு பிடித்து விட்டார் .


SIVA
மார் 26, 2025 17:39

அதிமுக தப்பாக கணக்கு போட்டால் தீமூகவிற்கு தான் லாபம் அப்ப அவர்கள் இந்த கூட்டணி நல்லது என்று தான சொல்ல வேண்டும் , அதிமுக பிஜேபி கூட்டணி அமைந்தால் திமுக எளிதாக வென்று விடும் என்று மகிழ தானே வேண்டும், ஏன் தவறு என்று சொல்கின்றார்கள் .....


தத்வமசி
மார் 26, 2025 14:19

எடப்பாடி இவ்வளவு நாள் சரியாக கணக்கு போடவில்லை. சரியாகத்தான் இப்போது கணக்கு போட துவங்கியுள்ளார். அதே நேரம் திமுகவின் விடை சரியாக வரப் போவதில்லை என்பது இவர்களுக்கு கண்ணுக்கு புலப்படுவதால் இந்த புலம்பல் தொடங்கி விட்டது.


SP
மார் 26, 2025 13:25

இதெல்லாம் ஒரு செய்தி என்று போடுகிறீர்கள் பார்.


புதிய வீடியோ