உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்கணும்; சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்கணும்; சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: 'ஒரு கட்சியை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும்' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: ஒரு கட்சியை நடத்த வேண்டும் என்பது சாதாரணமானது அல்ல. கட்சியை நடத்துகிற தலைவருக்கு, முகத்தில் இரண்டு கண் அல்ல. உடல் முழுவதும் கண்ணாக இருக்க வேண்டும். உடல் முழுவதும் சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும். காரணம் பல்வேறு குணங்களைக் கொண்ட, பல்வேறு விதமான மனிதர்களை அடங்கியது ஒரு கட்சி. எல்லோரையும் ஒன்று சேர்த்து அதனை அழைத்து செல்லும் திறமை எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சி, வெற்றி பெறும். செழிப்பாக இருக்கும். அது இல்லை, என்றால் அந்த கட்சி கொஞ்ச நாளில் இல்லாமல் போய்விடும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

c.mohanraj raj
அக் 21, 2025 20:06

உடல் முழுவதும் சட்டையில் பாக்கெட் இருக்க வேண்டும்.


கிருஷ்ணன்
அக் 21, 2025 12:23

என்ன சொல்ல வரீங்க?


ஆரூர் ரங்
அக் 21, 2025 10:39

உடம்பு பூராவும் கண் இருந்ததால்தான் ....


Manon
அக் 21, 2025 10:06

Kidneys are stolen as they are two only. If there are eyes bodyfull, it is not known how many eyes are stolen the party leader should spend his whole time protecting his eyes in the whole body.


Mummoorthy Ayyanasamy
அக் 21, 2025 10:04

ஆம்


ராமகிருஷ்ணன்
அக் 21, 2025 10:04

உடல் முழுவதும் கண்கள் அல்ல கைகள் இருக்கனும் தொரை. சுருட்ட கைகள் தானே முக்கியம்.


venkatapathy
அக் 21, 2025 09:39

முதன் முதலாக தோல்வி இவருக்காக காத்திருகிறது அப்புரேம் அவரின் அரசியல் முடியும் .


angbu ganesh
அக் 21, 2025 09:24

அப்படி இருந்த நாட்டில ஏன் இவ்ளோ அக்கருமம் நடக்குது கொலை கொள்ளை கற்பழிப்பு அப்போ தலைவருக்கு கண்ணே இல்ல


Velan Iyengaar, Sydney
அக் 21, 2025 09:09

அறிவு தான் முக்கியம் அதுவும் உலகிலேயே உங்களுக்கு மட்டும் தான் ஸ்பெஷல் பகுத்தறிவு உண்டு. அப்புறம் எதற்கு கண்கள்..


theruvasagan
அக் 21, 2025 08:50

உடல் முழுவதும் கண்கள் இருக்கிறதாலதான் நாலா பக்கமும் பார்வையை சுழட்டி மிச்சம் மீதி வைக்காம சுத்தமா வழிச்சு ஆட்டய போடமுடியுது.


முக்கிய வீடியோ