உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்: மனித உரிமை கமிஷனில் அருண் மன்னிப்பு

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்: மனித உரிமை கமிஷனில் அருண் மன்னிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில், 'ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தார். அதற்கு ஏற்ப, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், 'என்கவுன்டர்' செய்யப்பட்டார். அதன் பின், ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோரும் 'என்கவுன்டர்' நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.உதவி கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் உறவினர்களை சந்தித்து, எச்சரிக்கை செய்தனர்.சென்னை திருவொற்றியூரில் உள்ள, ரவுடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உதவி கமிஷனர் இளங்கோவன், அவரது மனைவியிடம், 'உங்கள் கணவர் கத்தியை எடுத்து ஏதேனும் கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான். கை கால்கள் உடைக்கப்படும்' என, எச்சரித்தார்.இச்சம்பவங்கள் குறித்து, மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து, உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது. அக்., 14ல் ஆஜராக வேண்டும் என, கமிஷனர் அருணுக்கு, 'சம்மன்' அனுப்பியது.அதையடுத்து, நீதிபதி மணிக்குமார் முன், அருண் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜரானார். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அருண் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, கமிஷனரின் பேச்சுக்கு மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Lion Drsekar
அக் 25, 2024 21:45

தீய சக்திகள் எங்குமே இல்லை என்றால் நாட்டில் பல துறைகள் அடியோடு மூடப்படும் நிலை உருவாகும், இதற்கு மேல் அவரவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இதுதான் இன்றைய உலகம், வந்தே மாதரம்


Balasubramanian N
அக் 22, 2024 15:00

நேர்மையான அதிகாரி காக்கி சட்டையின் மரியாதையை காப்பாற்றுபவர் என் ஆதரவு அவருக்கே


Kanns
அக் 19, 2024 10:03

Most Posts here are Not Neutral But AntiPeople PoliceBiased Agents paid from their Mamool-Loots


Kanns
அக் 19, 2024 09:54

MostPosts are Mamool Paid. Apology Must Not be Accepted. Must be Convicted for 506ii etc. Police have NO Right to do Goondaism against People But Arrest Prosecute in CourtTrials even Fast Track without Bail.Judges can Easily Differentiate Real& False Accused for Punishing RealAccused or Vested FalseComplainantGangs.75-90% Cases are False, Fabricated by Case-HungryDreadedCriminals for Cheap SelfSurvival& Strengthenings by Misusing NewsHungry Media, PowerMisusing Rulers-Officials& Vested FalseComplainantGangs esp women, unions/ groups, SCs, advocates etc etc. SHAMEFUL JUSTICE


.Dr.A.Joseph
அக் 18, 2024 22:20

லஞ்சம் பெறும் காவலர்களுக்கு என்ன மொழியில் புரிய வைப்பீர்கள் ......


rama adhavan
அக் 19, 2024 05:47

பதவி உயர்வு.


K V Ramadoss
அக் 18, 2024 18:16

மனித உரிமை கமிஷனுக்கு ௭ப்படி புரியவைப்பது, ரெளடிகளின் உரிமையைவிட சட்டத்தை மதிக்கும் பொதுமக்களின் உரிமையே முக்கியம் ௭ன்று ?


Indian
அக் 18, 2024 15:45

இப்படி ஒரு தரம் கேட்ட கமிஷன் தேவையே இல்லை


GOPAL
அக் 18, 2024 13:39

ஏன் மன்னிப்பு , நல்ல கார்யம் தான் செய்றார் , அவங்க பாஷயில அதத்தான் சொல்ல முடியும் , ஒன்னும் கவலைப்படாதீங்க சார் , டேக் யுவர் ஸெல்ப் டெஸிஸின்


ramani
அக் 18, 2024 13:17

மனித உரிமை கமிஷன் ரவுடிகளுக்கு ஆதரவாக பேசுவது கண்டிக்க தக்கது. அப்படியென்றால் ரவுடிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது


Varadarajan Nagarajan
அக் 18, 2024 13:01

பதவிபெயர் என்னவோ ரவுடி. அவர்களது பெயரில் பல குற்ற வழக்குகள் அவைகளுக்கு தீர்வு எப்பொழுது என பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் வரிசெலுத்தும் பொதுமக்களுக்கும் தெரியாது இவர்களுக்கு ஜாமீன் மட்டும் நிச்சயம் கிடைக்கும். இவர்களுக்கு வாதாட நிறைய வழக்கறிங்கர்களும் உள்ளனர். அதனால் ஜாமீனில் வெளியில் இருக்கும்போதும் அல்லது பாதுகாப்பாக சிறையில் இருந்தாலும் அவர்களது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற கடுங்குற்றங்கள் தொடரும். இவர்கள் செய்யும் காரியங்கள் மனிதன் செய்பவையாக இருந்தால் மனித உரிமை ஆணையம் தலையிடலாம். ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லவா மனிதர்கள். சமூக ஆர்வலர், பசுமை இயக்கம், சுற்றுசூழற் ஆர்வலர் இதுபோல நமக்கும் மட்டுமல்ல யாருக்குமே புரியாத லாஜிக்கில் வேறு சில ஆணையங்களும் செயல்படுகின்றன.


முக்கிய வீடியோ