வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மழை பெய்யட்டும் கனமழை
சென்னை: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப் 12) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு காரணமாக, இன்று (செப் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* கடலூர்* மயிலாடுதுறைசெப்டம்பர் 16, 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருப்பத்தூர்* கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழை பெய்யட்டும் கனமழை