உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தெற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் (டிச.,22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தற்போது வடக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகிறது.தமிழகத்தில் இன்று (டிச.,20) முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகரும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1:00 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
டிச 20, 2024 11:05

எப்பத்தான் வருது, விடியல் ஆட்சியில் புயல்கள் கூட பம்மாத்து காமிக்கிறது. இவங்க கொடுக்குற பில்டப்க்கு பயந்து விடுது புயல்


Raj Kamal
டிச 20, 2024 12:28

என்ன செய்ய, புயல் வந்து அதன் காரணமாக அழிவு வந்து, அதை காரணமாக வைத்து அரசியல் செய்யும் நபர்கள் இருக்கும் வரை - இயற்கையும் இவ்வாறு அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். நாமும் இங்கு வந்து இப்படி புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.


Sidharth
டிச 20, 2024 13:14

எந்த ஊரு சாமி நீயெல்லாம்


Raj Kamal
டிச 20, 2024 15:24

நீ எந்த ஊரு ஆசாமியோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை