உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதலையானார் செந்தில் பாலாஜி; மேள தாளம் முழங்க வரவேற்பு!

விடுதலையானார் செந்தில் பாலாஜி; மேள தாளம் முழங்க வரவேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விடுதலையாகி வெளியே வந்தார். சிறைக்கு வெளியே திரண்டிருந்த தி.மு.க., தொண்டர்கள், பட்டாசு, மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xde1vfav&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, பணம் மோசடி செய்தார் என்பது குற்றச்சாட்டு.இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிந்தனர். இதே குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்கு பதிந்து கடந்தாண்டு ஜூன் 14ல் கைது செய்தனர்.15 மாதங்களுக்கு மேலாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முட்டி மோதிய நிலையில், அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இன்று விடுதலை ஆகி விடுவார் என்று செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள், தி.மு.க.,வினர் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் வருக வருக என்று வரவேற்று பதிவிட்டார்.புழல் சிறையில் இருக்கும் அவரை வெளியில் கொண்டு வருவதற்காக, ஜாமின் ஆவணங்களை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தி.மு.க., வக்கீல்கள் இன்று தாக்கல் செய்தனர். அப்போது புதிய சிக்கல் உருவானது.அப்போது முதன்மை செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், 'ஜாமின் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் உள்ளன. எனவே பிணை உத்தரவாதங்களை இங்கு தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பே தாக்கல் செய்யுங்கள்' என்று கூறி விட்டார்.இதனால் என்ன செய்வதென தெரியாமல் தி.மு.க., வக்கீல்கள் தவித்தனர். கடைசி நேரத்தில் எப்படி விசாரணை அதிகாரியிடம் போக முடியும். வழக்கமாக நீதிமன்றத்தில் தானே தாக்கல் செய்வோம் என்று தி.மு.க., வக்கீல்கள் கூறினர். அதை நீதிபதி ஏற்க மறுத்து அமலாக்கத்துறை வக்கீலையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

நீதிபதி சரமாரி கேள்வி

செந்தில் பாலாஜிக்கு, அவரது உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் இருவரும் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்தனர். அதை ஆய்வு செய்த நீதிபதி, '60 வயதான ஒருவர், 69 ஆண்டுகளாக செந்தில் பாலாஜியை தெரியும் என்று எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்' என்று கேள்வி எழுப்பினார். இதில் பதில் கூற முடியாமல் தி.மு.க., வக்கீல்கள் திணறினர்.கடைசியில் விசாரணைக்கு அமலாக்கத்துறை வக்கீல் நேரில் ஆஜரானார். அவர், 'ஜாமின் உத்தரவாதத்தை நீதிமன்றம் ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை' என்று கூறினார். இதையடுத்து ஜாமின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனால் செந்தில் பாலாஜி விடுதலையாவதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது.

ஒரு வழியாக விடுதலை

இதையடுத்து ஜாமின் உத்தரவாதம் ஏற்கப்படுவதாகவும், செந்தில் பாலாஜியை விடுதலை செய்யலாம் என்றும், நீதிமன்ற உத்தரவு, இ-மெயில் மூலம் புழல் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள், இரவு 7:15 மணிக்கு செந்தில் பாலாஜியை விடுவித்தனர்.மொத்தம் 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த அவருக்கு, சாலையில் திரண்டிருந்த தி.மு.க., தொண்டர்கள், மேளதாளம், பட்டாசு முழங்க வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து விடுதலையாகும் செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு அளிக்க ஏராளமானோர், கார்களில் வந்ததால் அந்த வழியில் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

xyzabc
அக் 01, 2024 10:26

the dirty side of .....


வாய்மையே வெல்லும்
செப் 28, 2024 15:34

திருடனை வெளியே விட்டால் மேளதாளம்.. இது புது யுக்தி.. முதன் முதலில் நாயன புதல்வி சிறையில் இருந்து வீடு வரும்போது அதன் இசை சகோதரரான மேளதாளங்கள் படாடோபம் பட்டது மறந்திருக்க லாகாது. எல்லாம் திருட்டு கும்பல் செய்யும் கீழ் தரமான எச்சங்கள் .


சாண்டில்யன்
செப் 27, 2024 17:15

BJ P யில் சேர்ந்தால் உத்தமனாகிவிடுகிறார்கள் அதே நேரம் உன்மத்ததார்களாகவும் ஆகிவிடுகிறார்களே


கண்ணன்,மேலூர்
செப் 27, 2024 19:32

அறிவாலய அடிமையே உமக்கு எதுகை மோனை தேவையா சகிக்கல...


சாண்டில்யன்
செப் 29, 2024 17:25

கமலாலய அடிமைதானே அப்படித்தான் இருப்பாய் எழுபது ஆண்டுகளாய் எங்க இருந்தீங்க ?


Narayanan
செப் 27, 2024 16:51

ஜாமீனில்தான் வெளிவருகிறார் . இதற்கு தாரை தம்பட்டை வெடி முழக்கம் . இதற்கு மட்டும் தமிழக போலீசார் அனுமதி வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். ஒரு மாநாட்டை விஜய் கட்சி செய்வதற்கு ஆயிரத்தெட்டு கட்டுபாடுகள் . கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை திமுக . அதற்கும் ஸ்டாலின் சொல்வார் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று .


S. Neelakanta Pillai
செப் 27, 2024 12:37

ஆத்திகத்திற்கு பயன்பட்ட மேளதாளம் நாத்திகத்தை தூக்கிப் பிடிக்கும் ஆட்சியில் எதற்கு பயன்படுகிறது பாருங்கள், இங்கே யாருக்கும் வெட்கமில்லை.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 27, 2024 09:59

பை பாஸ் சர்ஜரியை பை பாஸ் செய்து இருக்கலாம்.


Raj Lakshmanan
செப் 27, 2024 01:09

வெரி நைஸ்


Nachiar
செப் 26, 2024 23:32

ஊழலுக்கு எதிராக அனுராவுக்கு வாக்கு போட்டது போல் தமிழகத்திலும் அண்ணாமலைக்கு வாக்கு போடும்வரை ஊழல் ஒழியாது


Jagan (Proud Sangi)
செப் 26, 2024 23:09

ஜாமீன் தானே. கேஸ் இன்னும் ஆரபிக்கவே இல்லை


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 27, 2024 00:52

அதே தான் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஜெயலலிதா போல ACCUST 1 என்று நிரூபிக்க படவில்லை


சாண்டில்யன்
செப் 27, 2024 17:07

முன்பு இதே வழக்கில் செந்தில் பாலாஜியை விடுவித்து தீர்ப்பு வந்ததே அப்போ ஏன் கப் சிப்?


தமிழன்
செப் 26, 2024 22:57

செந்தில் பாலாஜியாக சிறைக்கு சென்றவர் - இன்று, செய்தியில் பாலாஜியாக வெளியில் வந்து இருக்கிறார்.. இந்த கட்சியில் இருந்து "வெளியே " எப்போ வருவார்.. அந்த கட்சிக்கு "உள்ளே" எப்போ போவார் என்பது விரைவில் வரும்.


புதிய வீடியோ