உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிக்கன் ரோடு என்ற பெயரில் அரங்கேறும் புது மோசடி

 சிக்கன் ரோடு என்ற பெயரில் அரங்கேறும் புது மோசடி

சென்னை: 'குறைவான இந்திய பணத்தை முதலீடு செய்து, வெளிநாட்டு பணத்தை அதிகம் சம்பாதிக்கலாம்' என கூறி, 'சிக்கன் ரோடு' என்ற பெயரில் மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. ஆன்லைன் வேலை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' என, பல வகைகளில், தினமும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள், இவற்றை தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், மோசடி கும்பல், புதுப்புது வழிகளில் மோசடி செய்து, பணத்தை பறித்து வருகிறது. அந்த வகையில், சமீப நாட்களாக, இந்திய பணத்தை முதலீடு செய்து விளையாடினால், 'யூரோ கரன்சியில் நிறைய சம்பாதிக்கலாம்' என கூறி, மோசடி கும்பல் புது மோசடியை அரங்கேற்றி வருகிறது. இது குறித்து, சைபர் வல்லுநர்கள் சிலர் கூறியதாவது: 'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைதளங்களில், 'சிக்கன் ரோடு' என்ற பெயரில், செயலி ஒன்று பிரபலப்படுத்தப்படுகிறது. அதில், இந்தியர்கள், குறைந்த தொகையை செலுத்தி விளையாடினால், யூரோ கரன்சியில் நல்ல லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்துகின்றனர். இந்த செயலி, 'ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில்' தடை செய்யப்பட்டுள்ளது. விபரம் தெரியாதவர்கள், குறைந்த பட்சம் 3,000 ரூபாயில் துவங்கி, லட்சங்களில் பணத்தை இழந்து வருகின்றனர். இது மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத செயலியை பதிவிறக்கம் செய்வது, நம் வங்கி உள்ளிட்ட, தனிப்பட்ட தகவல்கள்கள் திருடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

raja
பிப் 24, 2026 07:20

நல்ல விசாரிச்சு பாருங்க எஜமான் பின்புலத்தில் திருட்டு திராவிட கோவால் புற குடும்பமா இருக்கபோவுது...


GUNASEKARAN RANGASAMY
பிப் 24, 2026 08:37

உங்களுக்குத் தெரிந்தது மோடிக்கும் ஷா-வுக்கும் தெரியவில்லை. என்ன கொடுமை? 12 வருடங்களாக வெறும் நேருவைபபற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Sivaprakasam Chinnayan
பிப் 24, 2026 16:31

இதுவரை ஓடும் திருடினவன் அத்தனை பேரும் வரலாற்றையும் நல்லா படிச்சு பாருங்க


ஊர்குருவி
பிப் 24, 2026 05:04

மக்களின் பேராசை மூளையை முடக்கிவிடுகிறது.சிந்திக்கத்தெரியவில்லை .தெரிந்தவர்களிடம் கொடுக்கும் பணமே வசூலிப்பது கடினமாக இருக்கும்காலத்தில் தெரியாத எவனோ நமக்கு எப்படி பன்மடங்க ஆக்குவான் .இதுமாதிரி ஏமாறும் மனநிலையில் உள்ளவர்கள் தனியாக வங்கிகளில் கணக்குவைத்து கொள்ளக்கூடாது .


Kasimani Baskaran
பிப் 24, 2026 04:08

ஆப்பிள்க்கு போட்டியாக வந்த ஆண்டிராய்டு இன்று தகவல்களை திருட பயன்படுகிறது. பெரும்பாலும் சைடு லோடிங் என்ற முறையில் கள்ளத்தனமாக பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் வாயிலாக.


Sivaprakasam Chinnayan
பிப் 24, 2026 16:44

ஆப்பிள் ஆண்ட்ராய்டு எதுவாக இருக்கட்டும் எதுக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை