வாசகர்கள் கருத்துகள் ( 32 )
சாதாரண ஒரு மருத்துவருக்காக அமைச்சர் படை விசாரிக்க செல்லும் போதே சின்ன சந்தேகம் வந்தது . அவரின் பின்னணி நதிமூலம் வரை செல்கின்றது
எந்த ஏழை நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மருத்துவரை தாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு சிகிச்சைக்கு செல்வதில்லை. ஒரு கான்சர் நோயாளியை எப்படி அணுகவேண்டும் என மருத்துவத்தில் படிக்கவில்லையா..? ஏழை நோயாளிகளின்மீது அரசுமருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அலட்சியம் ஏளனம் முதலியவற்றை கவனத்தில் கொண்டு இந்த வழக்கை நீதிமன்றம் அணுகவேண்டும். அரசு மருத்துவர்கள் அதிகாரவர்க்கம். ஏழை நோயாளிகள் பாவப்பட்டவர்கள்.
சில காலம் முன்பு, வேலூர் அரசு மருத்துவ மனையில் பணி புரியும் அநேக மருத்துவர்கள் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு 9.30 அளவில் மருத்துவ மனைக்கு சென்று வருகைப் பதிவேட்டில் கை எழுத்திட்டு சிறிது நேரம் இருந்து விட்டு 11மணி அளவில் புறப் பட்டு மீண்டும் மதியம் சென்னை வந்து அவர்கள் சொந்த கிளினிக்களில் அல்லது கார்பொரேட் அல்லது தனியார் மருத்துவ மனைகளில் பணி புரிந்து வந்தது நினைவில் வருகிறது. அந்த மருத்துவர்களை அரசு சஸ்பென்ட் தான் செய்தது. This act of those doctors called for dismissal and jail punishment. But what happened later, nobody knows. How many lakhs were interchanged only the doctor and the politician alone know.
அரசு மருத்துவ மனைகளில் பயோமெட்ரிக் வருகை/வெளியேறுதல் துல்யமாக இல்லை. நான் ஒரு கார்பொரேட் கம்பனிக்கு சென்று இருந்தேன். ஊழியர்கள் ஒவ்வொரு முறை உள்ளே செல்லும்போதும் சரி, வெளியே வரும்போதும் சரி பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் வெளியே போக முடியாது. அப்படி சென்றால் மீண்டும் உள்ளே வர முடியாது. அப்படியே வீட்டுக்கு போகவேண்டியது தான் பரிதாபத்துக்குரியவர்கள் வெளி நோயாளிகளை பார்க்கும் மருத்துவர்கள் தான்.
சில மாதங்கள் முன் அண்ணா பல்கலை கழகத்தில் affiliated ஆக இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் இருந்ததாக ஒரு பூகம்பம் கிளம்பியது. அது என்ன ஆயிற்று ? அதுபோல் அரசு மருத்துவ மனைகளில் பணி புரியும் senior மருத்துவர்கள் சொந்த கிளினிக் அல்லது corporate மருத்துவ மனைகளில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணி செய்வது நிதர்சனம். அரசு மருத்துவ மனைகளில் முழு நேரம் பணி செய்வதில்லை. மருத்துவர் பற்றாக்குறை உள்ளது என்பது junior level தான். Senior லெவலில் போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். கஷ்டப் படுவது பயிற்சி மருத்துவர்களும், resident மருத்துவர்களும் தான்.
அரசு மருத்துவர் பாலாஜி காவேரி மருத்துவ மனையில் முழு நேர மருத்துவர் ஆக பணி செய்வதாக திருச்சி சூர்யா சிவா காணொளி வெளி இட்டுள்ளார். அது உண்மையெனில் அரசு மருத்துவர் பாலாஜி மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?
ரகுநாதன் சொல்வது உண்மை டாக்டர் பாலாஜி காவேரி ஹாஸ்பிடல் என்று கூகுலில் சர்ச் செய்தால் அவர் போட்டோ உடன் டீடெயில்ஸ் வருகின்றது. காவேரி மருத்துவமனை பின்னணி அனைவரும் அறிந்ததே .....
அரசு மருத்துவர் சோ அரசு கண்டுக்காது நியாயம் தூங்கும்
மனிதாபிமானம் ,கருணை , இரக்கம் எல்லாம் செத்து போச்சு .... கான்சர் நோயினால் மரணிக்க போகும் ஒரு நோயாளியிடம் கொஞ்சம் கருணை காட்டுங்க பாஸ் .
மோசஸ் நல்லவன், கர்த்தரின் சீடர்கள் வாழ்க
நீதிமன்றம் தானாக விசாரிக்க வேண்டும். மருத்துவர்கள் அனைவரும் மிகுந்த வசதியும் செல்வாக்கும் பெற்றவர்கள் கண்டிப்பாக நீதி நியாயம் கிடைக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை விரைவில் பிசுபிசுத்து போய்விடும். பொதுவான சூழ்நிலையின் அடிப்படையிலே கருத்து தெரிவிக்கபடுகிறது.