உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்

சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்; அவர்களை முறையாக நடத்தாவிட்டால், வெளியில் வந்த பிறகும் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.வேலுார் சிறையில் உள்ள தன் மகன் சிவகுமாரை சந்திக்க அனுமதி கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஆயுள் தண்டனை கைதியான என் மகனை, சிறை வார்டன்கள் தாக்கி, தனிமை சிறையில் அடைத்துள்ளனர்.வேலுார் டி.ஐ.ஜி., வீட்டில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டி, மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.உயிருக்கு ஆபத்து உள்ளதால், மகனை சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தவறு செய்தவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிந்து, உடனே விசாரணையை துவங்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மூடி முத்திரையிட்ட உரையில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் தாக்கல் செய்தார்.அதை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சிறைத்துறை டி.ஜி.பி., அளித்த அறிக்கையில், தவறு செய்த சிறைத்துறை டி.ஐ.ஜி., - எஸ்.பி., உள்ளிட்டோருக்கு எதிராக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.அந்த அறிக்கை, தற்போது, மாநில அரசின் உள்துறை செயலரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கையை, விரைவாக உள்துறை செயலர் எடுக்க வேண்டும்.நீதிமன்றம் உத்தரவிட்டதும், சி.பி.சி.ஐ.டி., உடனே நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது. சிறை என்பது, அங்குள்ள கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்.அங்கு, அவர்கள் முறையாக நடத்தப்படவில்லை எனில், வெளியில் வந்த பிறகும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது.இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்.இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை அக்., 21க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ram pollachi
செப் 22, 2024 16:36

கொலை, கொள்ளை, கூட்டு கற்பழிப்பு செய்ய தெரிந்தவனுக்கு இதை அடிக்க சொல்லி தர வேண்டாம்.... அதான் இழுக்க இழுக்க இன்பம் கிடைக்கும் இடமாச்சே????


Oviya Vijay
செப் 22, 2024 15:26

அது எங்க இங்கே இருக்கு... நெக்ஸ்ட்டு...


panneer selvam
செப் 22, 2024 14:24

Judge Sirs, preaching is simple but reality is different . Just get to know from former prisoners how our jails are making every prisoner to become a part of hard core criminal syndicates .


kulandai kannan
செப் 22, 2024 12:49

சிறையின் நோக்கம் அது மட்டுமல்ல. சிறைதண்டனைக்கு அஞ்சி மற்றவர் கள் தவறு செய்யாலிருக்கவும்தான். Punishment should act as a deterrent for others.


Ramesh Sargam
செப் 22, 2024 12:48

அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் அப்படி செயல்படவில்லையா ....? ஆமாம், கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சில கைதிகள், குறிப்பாக அரசியல் கைதிகள், செல்வாக்கு உள்ள கைதிகள், சிறையில் இருக்கும்போதுகூட வெளியில் ஷாப்பிங் செல்வதும், சிறைக்குள்ளேயே வீட்டில் என்ன என்ன வசதி இருக்குமோ அத்தனையையும் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து செய்துகொண்டு நிம்மதியாக இருப்பதும். அது எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் ஒரு முடிவுகட்டவேண்டும்.


V RAMASWAMY
செப் 22, 2024 11:54

நல்ல கருத்து நல்ல அறிவுரை ஆனால் சிறை என்பதே குண்டர்களின் கூடாரம் ஆகிவிட்ட நிலையில் இதெல்லாம் எடுபடுமா என்பது தான் கவலை.


spr
செப் 22, 2024 11:13

"சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும் அவர்களை முறையாக நடத்தாவிட்டால், வெளியில் வந்த பிறகும் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது - இது ஒரு கனவு இதுவரை பொய்யாகிப் போனது. பலருக்குச் சிறை வாழக்கை சொர்க்க வாழ்க்கையாகிவிட்டது. அதனால் பலரும் தேடி வந்து சிறை செல்ல தயாராகிவிட்டனர். சமுதாயத்தின் ஒரு சிறு பங்கே இன்னமும் பாவம் புண்ணியம் இறைவன் தண்டிப்பான் சமுதாயம் ஒதுக்கிவிடும் சிறை செல்வது அவமானம் என்றெல்லாம் நினைக்கிறது பெரும்பாலோருக்கு அந்த நினைப்பேயில்லை என்பதால் குற்றம் புரிவதைக் குறித்து பயமேயில்லை ஒரு சிலர் மட்டுமே தண்டனை கடுமையாக இருக்குமோ என்ற நினைப்பாலே தவறு செய்யும் முன் யோசிக்கிறார்கள் எனவே அனைத்துக் குற்றங்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்


தமிழ்வேள்
செப் 22, 2024 10:55

சிறைகள் கோர்ட்டின் நேரடி நிர்வாகத்தில் இருக்க வேண்டும்.. போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் உருவாக்க படுவார்கள்.. ஐரோப்பா போல குற்றம் கண்டு பிடித்த போலீஸ் வழக்கு நடத்த தேவை இல்லை. தனி துறை தேவை. சிறை என்பது கோர்ட் சப்ஜெக்ட்... இல்லை என்றால் குற்றவாளிகள் திருந்த மாட்டார்கள். திராவிட அரசியல் வாதிகள் கும்பல் எண்ணிக்கை கூடும்.. தட்ஸ் ஆல்..


Ram pollachi
செப் 22, 2024 10:12

குற்றவாளிகளை உருவாக்கும் நவீன தொழிற்சாலை தான் இன்றைய சிறைச்சாலை...


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 09:50

அப்போ பாளையங்கோட்டை சிறை ???? பாம்பு, பல்லிகள் நடுவே துன்பம் ????


புதிய வீடியோ