மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
ராமேஸ்வரம், : -ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.2லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பார்சல் ஒதுங்கியது. இதனை கைப்பற்றி கடத்திய நபர்கள் குறித்து மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.தனுஷ்கோடி பழைய துறைமுகம் அருகே நேற்று ஒரு மூடை ஒதுங்கி கிடந்தது. இதனை மரைன் போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதனுள் 11 பார்சலில் 22 கிலோ கஞ்சா இருந்தது. கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் சென்ற போது இந்திய ரோந்து கப்பலை கண்டதும் மூடையை கடலில் வீசி விட்டு தப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மூடை காற்றின் வேகத்தில் தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கி உள்ளது. இதன் மதிப்பு ரூ. ரூ.2 லட்சத்து 20 ஆயிரமாகும். கடத்தி செல்ல முயன்ற கடத்தல்காரர்கள் யார் என மரைன் போலீசார் விசாரிக்கின்றனர். 3 டன் பீடி இலை பறிமுதல்
துாத்துக்குடி அருகே கடற்கரை கிராமம் சிலுவைப்பட்டியில் நேற்று காலையில் கியூ பிராஞ்ச் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு லாரியில் இருந்து இரண்டு படகுகளில் மூட்டைகளை ஏற்றினர். போலீஸ் வருவதை கண்டதும் அந்த கும்பல் தப்பிச் சென்றது. விசாரணையில் மூன்று டன் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஒரு லாரி, இரண்டு படகுகள், ஒரு டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago | 1
8 hour(s) ago
8 hour(s) ago