உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்ல மனம் வாழ்க; சர்ப்ரைஸ் தந்த தூய்மைப் பணியாளர்களை கமென்ட் செய்து வாழ்த்துங்க வாசகர்களே!

நல்ல மனம் வாழ்க; சர்ப்ரைஸ் தந்த தூய்மைப் பணியாளர்களை கமென்ட் செய்து வாழ்த்துங்க வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி கோவில் விழாவின்போது பூக்கடை உரிமையாளரான அஸ்வினி ரூ.25,000 பணத்தை தொலைத்து விட்டார். அதை தூய்மை பணியாளர்களான நீலாவதி, தேவி ஆகியோர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். நல்ல மனசு உடைய தூய்மை பணியாளர்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்பது குறித்து கமென்ட் செய்யுங்கள் தினமலர் வாசகர்களே!சென்னை திருவல்லிக்கேணியில் கோவில் விழாவில் கூட்டம் நெரிசல் அலைமோதியது. அங்கு, பூக்கடை நடத்தி வந்த அஸ்வனி என்பவர் ரூ.25 ஆயிரத்தை தொலைத்து விட்டார். இதையடுத்து, பணம் தொலைந்து போனதை, அறிந்து அஸ்வினி பதற்றத்துடன் தேடி அலைந்தார். உழைத்த பணம் எங்கும் போகாது என்று சொல்வார்கள். தூய்மை பணி மேற்கொண்ட நீலாவதி, தேவி ஆகியோர் பணத்தை பார்த்ததும் எடுத்தனர். அவர்கள் பணத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை, தேடி கண்டெடுத்து கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு, அஸ்வினி நன்றி தெரிவித்தார். இந்த புகைப்படத்தை சென்னை மாநகராட்சி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. 'வணக்கம் சென்னைமக்களே, திருவல்லிக்கேணியில் கோவில் விழாவின்போது பூக்கடை உரிமையாளரான அஸ்வினி தொலைத்த ரூ.25 ஆயிரம் பணத்தை மீட்டு தூய்மை பணியாளர்கள் கொடுத்துள்ளனர்' என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 'அடுத்தவர்கள் பணம் நமக்கு தேவையில்லை. உழைத்த பணம் மட்டும் போதும் என்ற மனசு உடைய தூய்மை பணியாளர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்பது குறித்து, செய்தியை படித்து முடித்துவிட்டு கமென்ட் செய்யுங்கள் தினமலர் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Bala
அக் 04, 2024 20:27

Nalla manam vazhga!!!


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 04, 2024 17:15

வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் படித்த மேதாவிகள் ஜோடி போன்ற பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நாள் கூலி ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று வாங்கும் முறைசார் தொழிலாளிகள் இவர்கள் அனைவரும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் பக்கத்து காலியிடங்கள் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் போகும் பொழுது அப்படியே இடது பக்கம் தூக்கி வீசி விட்டு செல்கிறார்கள். இவர்கள் இந்தியா குப்பை நாடு என்று வசனம் வேறு பேசுபவர்கள். இவர்களுக்கு மத்தியில் குப்பைகளை அள்ளி தூய்மை படுத்தி இந்தியாவை அழகாக்கும் இத்தூய்மை சகோதரிகள் கடவுளுக்கும் மேலானவர்காளாக பார்க்க வைத்து விட்டது இச்செயல். கோரோணா காலத்தில் அமைச்சர்கள் கூட இவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்கள். கோரோணா காலத்தில் அனைத்து இடங்களிலும் தூய்மையாக வைத்து இருந்தனர். கோரோணா பரவலை கட்டுப்படுத்த இவர்களின் பங்களிப்பு மருத்துவர்கள் பங்களிப்பு விட மிகப்பெரியது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.


Barakat Ali
அக் 04, 2024 16:04

நல்ல மனங்கள் வாழ்க .....


vkn
அக் 04, 2024 14:41

தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் .... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ...


KUMARAN TRADERS
அக் 04, 2024 14:10

ரியல் கட்சி அமைத்து கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு நடுவிலே தூய்மை பணி செய்யும் உழைப்பாளிகளே தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்


Bala
அக் 04, 2024 13:45

எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் உண்டு . நன்றி


Amar Akbar Antony
அக் 04, 2024 13:40

எல்லோவருக்கும் இதயமுண்டு மனமுமுண்டு எத்துணையோ அரசியல் தலைவர்களை பார்த்திருக்கோம் அன்றும் இன்றும். வேறுபடுத்தி காண்பிக்க கர்மவீரர் காமராசு அவர்களையே உதாரணமாக சொல்கிறோம். அவ்வளவு நேர்மை, எளிமை, முக்கியமாக சுயநலமற்ற பொதுச்சொத்தை கையால் கூட சுயநலத்திற்காக தொட்டதில்லை. அப்படிப்பட்ட தலைவரின் குணாதிசியங்கள் இந்த சகோதரிகளுக்கும் இருக்கின்றது. உழைப்பே உயர்வு நேர்மையே பொதுமக்களின் மனதை வெல்லும்உங்கள் குடும்பமே நன்றாக உயரும் .


Kumar Kumzi
அக் 04, 2024 12:28

ஏழைகளாக இருந்தாலும் உங்களின் நேர்மையை பாராட்டுகிறோம் உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்


HoneyBee
அக் 04, 2024 12:05

ஏழைகள் மனம் அப்படித்தான் இருக்கும்.. உழைப்பின் அருமை தெரிந்த அந்த தூய்மை பணியாளர்களை கைகூப்பி வணங்குகிறேன்...


Sankaran S
அக் 04, 2024 12:00

நேர்மை வெல்லும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை