உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சிக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா செயல்பாடு: திருமாவளவன் பேட்டி

கட்சிக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா செயல்பாடு: திருமாவளவன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். தொடர்பான முடிவு விரைவில் வரும்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரையில், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் வி.சி.க., இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. தி.மு.க., கூட்டணி கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள சதி திட்டமாக இருக்கும். தலித் அல்லாதவர்களை பாதுகாக்க வேண்டியது கட்சியின் அடிப்படை விதி. துணை பொதுச்செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜூனா. ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நடவடிக்கை

கட்சி, கட்டுப்பாட்டை மீறும் போது, கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும் போது உயர்நிலைக் குழுவில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று இது குறித்து பேசியுள்ளோம். ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். வி.சி.க., குறி வைக்கப்படுகிறது என்பதை விட தி.மு.க., கூட்டணி குறிவைக்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான சதியாக இருக்கும். தி.மு.க., அழுத்தம் தருகிறது எனில் ஆரம்பத்திலேயே விழாவில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை அதற்கான சூழல் இல்லை.

அரசியல் எதிரி

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என்பது சுயமாக எடுத்த முடிவு. தி.மு.க.,வோ, வேறு யாரோ எந்த அழுத்தமும் எள்முனை அளவு கூட தரவில்லை. தி.மு.க.,வை அரசியல் எதிரி என வெளிப்படையாக விஜய் அறிவித்த பிறகு அந்த மேடையில் கலந்து கொள்ள முடியாது. நானும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்த சதி வாய்ப்புள்ளது. விஜய் மீதோ, அவரோடு நிற்பதிலோ எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. புதியதாக அமையும் கூட்டணியில் வி.சி.க., இடம் பெறாது. புதிய கூட்டணியில் வி.சி.க., இடம் பெற வேண்டிய தேவையும் எழவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

MANIMARAN A
டிச 08, 2024 19:48

தமிழ் தலைவர் திருமா My vote and my family vote for திருமா only


பேசும் தமிழன்
டிச 08, 2024 19:23

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று இவர் கூறலாம் ...ஆனால் அந்த கட்சியை சேர்ந்த ஆள் பேசியது தவறு .....நல்லா இருக்கு உங்க நியாயம்.


sankar
டிச 08, 2024 18:23

என்ன செய்ய - பணம் காய்க்கும் மரம் கிடைத்து இருக்கும்போது விடமுடியாதே


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 17:39

பாஜக வுக்கு அல்லது அதன் பினாமி விஜய் க்கு காவடி எடுப்பதில் சீமானுக்கும் திருமாவுக்கும் தான் போட்டி.


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 17:35

"திருமாவிடம், நீங்க போகாத விழாவுக்கு ஏன் உன்னோட கட்சிக்காரனை அனுப்பினீர்கள்?" என்ற கேள்வியைக் கேட்க எந்த நிருபருக்கும் தோன்றவில்லையா?


Suppan
டிச 08, 2024 17:20

எங்களுக்கு வசதிப்படும் பொழுது ஆம்பேட்கரைப்போற்றுவதுதான் எங்கள் வழக்கம். அவருடைய எல்லா கருத்துக்களையும் எங்கள் தலீவர் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் மேடையில் வாய் கிழிய பேசுவார். அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். கட்சின்னு ஒன்றை நடத்தி நாலு காசு பார்ப்பதை விட்டு விட்டு வேண்டாத வேலை எல்லாம் திருமா செய்வதில்லை.


Sampath Kumar
டிச 08, 2024 17:19

வேலி யில் போன ஓணாண்ணை ஏடுத்து வேட்டிக்குள் உட்டது போல விட்டு கிட்டு இப்போ வந்து குத்துது கொடையறது சொன்னால் என்ன அர்த்தம்


Bhaskaran
டிச 08, 2024 17:12

பணம் இரண்டு சீட் மட்டுமே முக்கியம் மானம் ரோஷம் இரண்டாம் பட்சம்


Rpalni
டிச 08, 2024 16:02

திருமா தலித் மக்களின் ஏகோபித்த தலைவர் இல்ல. தமிழனும் இல்ல. இவ்வாரம் நல்ல சபிஜக்ட். படிங்க சிரிங்க


A Viswanathan
டிச 09, 2024 10:50

இந்த ஆளை கழற்றி விடுங்கள் அப்போது தெரியும் அவரின் உண்மையான பலம். சிறு கூட்டத்தை வைத்துக்கொண்டு அவரும் அவரை சுற்றியிருக்கும் சில பேரும் கும்மாளம் போடுகிறார்கள்


R.MURALIKRISHNAN
டிச 08, 2024 15:58

திருமாவிற்கு மானஸ்தன்கள் கட்சியில் இருப்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை