உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; ஆதவ் அர்ஜூனா பேச்சால் தி.மு.க., கூட்டணியில் சிக்கல்!

2026ல் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; ஆதவ் அர்ஜூனா பேச்சால் தி.மு.க., கூட்டணியில் சிக்கல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மன்னராட்சி நிலவுகிறது. 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பேசப்பட்ட, உற்று நோக்கப்பட்ட நிகழ்வு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (டிச.6) அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n4zcaro5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விகடன் நிறுவனம் சார்பில் நடந்த விழாவில், விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, தவெக தலைவர் நடிகர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்னும்போது, அதற்கு முதல் குரலாக நடிகர் விஜயின் குரல் ஒலித்தது. அவர் 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலைவிட்டு இங்கே வந்திருக்கிறார்.இங்கே சிலர், சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செய்கின்றனர். ஒரு நிறுவனம் எப்படி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது? தமிழகத்தில் நிலவும் ஊழலையும், மதவாதத்தையும் பற்றி விஜய் பேச வேண்டும். வேங்கை வயல் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். ஆனால் சாதி தான் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நடிகர் விஜய் வேங்கைவயல் செல்லவேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்கி அதில் பட்டியலின மக்களை பங்கேற்க வைக்கவேண்டும். இங்கு மன்னராட்சி நிலவுகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கேட்டால் சங்கி என்கிறார்கள். 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் புதிய அரசியலை மக்கள் உருவாக்க முடிவெடுத்துள்ளனர். பிறப்பால் ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது.இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் அதே தருணத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு துணை பொதுச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் ஆதவ் அர்ஜூனாவுக்கு நேர் எதிராக பேசி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது; எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை ஏன் தவிர்த்தார் என்று விளக்கம் கொடுத்துவிட்டார். பொதுவான ஒரு நிகழ்ச்சியாக, அம்பேத்கரை கொண்டாடுகிற சிறப்பு நிகழ்ச்சியாக இருந்தால் அது எந்த மேடையாக இருந்தாலும் நாங்கள் ஏறுவோம். இது ஒரு நூல் வெளியீட்டு விழா அல்ல. அதில் ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டதால் தான் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆதவ் அர்ஜூனா பேசும் மன்னராட்சியை தமிழகத்தில் ஆட்சியில் உட்கார வைக்க 5 ஆண்டுகள் வேலை பார்த்தவர் அவர்தான். இப்போது (ஆதவ் அர்ஜூனா) எங்கள் கட்சியில் இருக்கிறார். இப்போது நடிகர் விஜய்க்காக ஆதர் அர்ஜூனா வேலை பார்க்கிறார். அவரது பொறுப்பு என்ன, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி திருமாவளவன் இனி முடிவு எடுப்பார். எங்கள் கட்சி நிலைப்பாடு என்ன என்பதை பற்றி அவர் மீண்டும், மீண்டும் தெளிவுப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.ஆதவ் அர்ஜூனா பேச்சால் வி.சி.க., கட்சிக்குள்ளும், தி.மு.க., கூட்டணியிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா மீது திருமா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க., தரப்பில் அழுத்தம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Jay
டிச 08, 2024 12:17

மன்னராட்சி ஒழிக்க படவேண்டும் என்பது சரியான பேச்சு.


Pandianpillai Pandi
டிச 07, 2024 19:39

கூட்டணியில் பிளவுபடுத்த பேசப்பட்ட உசுப்பேற்றப்பட்ட பேச்சுதான் ஆதவ் அவர்களின் பேச்சு. அம்பேத்கார் நினைவு நாளை யாரும் நினைவுபடுத்தி பேசியதாக தெரியவில்லை. அரசியலுக்காக அம்பேத்கார் பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். வெட்கக்கேடு பழங்காலத்தில் மன்னராட்சி என்பது கொடிய ஆட்சி இல்லை மக்களிடம் இருந்த அறியாமையால் மக்கள் அல்லல்பட்டனர். திராவிட கழகம் தோன்றிய பிறகு அறியாமை கலையப்பட்டிருக்கிறது . தமிழகத்தில் கற்றலில் பல பரிணாமங்களை பெற்று மனிதத்தை வளர்த்தவர் கலைஞர். அவரை மன்னர் என்றோ மன்னராட்சி என்றோ ஒதுக்கி மக்களிடம் இருந்து பிரித்துவிட முடியாது. நாவடக்கம் இன்றி மதியின்றி ஆதவ் அவர்கள் பேசியிருப்பது வன்மத்தை காட்டுகிறது . எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்கும் திருமா அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆதவ் அவர்கள் அவரது கடந்து வந்த பாதையை மறந்து விஜயின் விருந்தோம்பலில் மயங்கிவிட்டார் போலும். இனிமேலும் இவ்வாறு பேசினால் தி மு க தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் .


joe
டிச 07, 2024 14:39

தற்போது உள்ள ஊழல் ஆட்சியே "மன்னர் ஆட்சி" என குறிப்பிட்டது சரியான ஊழல் வாதிகளையே குறிக்கிறது. உண்மை வெளி வந்ததா?. நீங்கள் போட்ட ஓட்டு ஊழல்வாதிகளுக்கே.


sankar
டிச 07, 2024 12:03

ஏதாவது நடப்பு விஷயங்களை திசைதிரூப்பவேண்டுமா - கூப்பிடு ஆதவை


angbu ganesh
டிச 07, 2024 11:25

ஜெயா காலுல விழுந்து தலைவா சிப்பு சிப்பா வருது படத்தை ரிலீஸ் பண்ண விஜய் பட்ட பாடு அப்படியும் அந்த படம் ஊத்திக்கிச்சு அது வேற அதா அந்த வடிவேலு கூட பட்டிருக்க மாட்டார், வீட்டுக்கு நாளை நாமதே-ன்னு பேர் வச்சு அணில் பட்ட பாடு


karthikeyan
டிச 07, 2024 11:09

SUPER Arjuna, Vetri Vijay. Well done Vikatan , Thumsup Dinamalar. Theeya Sakthi Down Down. Karthik


angbu ganesh
டிச 07, 2024 10:01

விஜய் தப்பு கணக்கு போடறார், படத்துக்கு கூட்டம் சேக்கற மாதிரி இல்ல வோட்டு வாங்கறது 60 வருசமா தமிழ் நட்ட ஏமாத்தி பணம், பதவி சொத்து எல்லாம் சேர்த்து நல்ல வசதி வாழ்க்கை வாழ்ந்து அந்த வாழ்க்கையை அவ்வளவு சுலபமா விட்டுட மாட்டானுங்க, இவர்விஜய் என்னமோ 2000 கோடி வாழ்க்கையை விட்டுட்டு அரசியலுக்கு வரறாராம் ஏன் அவ்ளோ தைரியமானவன்நா தமிழ் நாட்டுக்கு நல்லது பண்ணனும்னு நெனச்சு அரசியலுக்கு வரேன்னு சொல்ற நீ எப்படி ஊஷால் ஒன்றுதான் வாழ்க்கைன்னு நெனைக்கற நாட்டு மக்களுக்கு நல்லதே நினைக்காத கேட்டு போன குரூமா கூட கூட்டு வக்கர பொரியல் வக்கர தைரியமான ஆம்பளையா இருந்த தனியா நில்லு நானே உனக்கு ஒட்டு போடறேன்


Barakat Ali
டிச 07, 2024 10:53

மீண்டும் மீண்டும் பலர் சொல்கிறோம் ..... விஜய் தானே விரும்பி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை .... எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுகவுக்கே உதவவேண்டும் என்கிற நோக்கத்தில் திமுகவால் இறக்கிவிடப்பட்டவர் .... எங்கே, விஜய்யை அதிமுக, தேமுதிக, பாமக, தமாக ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடச்சொல்லுங்கள் பார்ப்போம் .... அப்படி ஒரு முயற்சியைச் செய்தால் கூட குடும்பக்கட்சியால் தவெகா கட்சியை திமுக உடைத்து தூள் தூளாக்கும் .....


எவர்கிங்
டிச 07, 2024 09:34

இந்த பேச்சை தொளதொளவே தவறு என சொல்லிட்டார்?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 08:45

துணைமுதல்வராக உதயநிதி பதவியேற்ற பொழுது இவர் கோமாவில் இருந்தாரா ????


sridhar
டிச 07, 2024 08:08

அப்பட்டமான திமுக எதிர்ப்பு பேச்சு . திருமா இரண்டு மூன்று இடங்களில் துண்டு போடுகிறார். சந்தர்பவாதி .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை